வோடாபோன் ஐடியா (Vi) மற்றும் ஏர்டெல் அதிரடி!!,ஜியோ நிறுவனம் மௌனம் !!!ரீசார்ஜ் பற்றிய தகவல்கள்
வோடாபோன் ஐடியா (Vi) மற்றும் ஏர்டெல் சமீபத்தில் தங்களின் நிதி சிக்கல்களை சரிசெய்ய மற்றும் மேம்படுத்த டாரிஃப் (tariff) கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளன. இதனால், இந்திய தொலைத்தொடர்பு துறை (telecom sector) தற்போது ஒரு முக்கியமான திருப்பத்திற்கு வருவதற்கான நிலையை உருவாக்கியுள்ளது.
ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா என்ன கூறுகிறது என்றால்,
குறைந்த விலையில் வழங்கப்படும் சேவைகள் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் என்று கூறி, வருமானம் மேம்படுத்த டாரிஃப் உயர்வு வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. வோடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் பாவனையாளர்களின் சராசரி வருமானம் குறைவாக உள்ளதாலும், உற்பத்தி செலவுகள் உயர்ந்ததாலும் நிதி சிரமத்தில் உள்ளன.
ஜியோ இதை ஆதரிக்குமா ?
- ஜியோ, தொடங்கிய காலத்தில் விலை குறைவாக வழங்கி சந்தையை கைப்பற்றியது, அதனால் இது ஒரு விலை குறைந்த நிலைமை போகும் எனவே இது உடனடியாக விலை உயர்வை ஆதரிக்க வாய்ப்பு இல்லை.
- ஜியோ விலை உயர்வு செய்வதால் மற்ற இடத்தில் பாவனையாளர்கள் எளிதில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் ஜியோ மிகவும் சிக்கலான நிலைமையை சந்திக்கலாம்.
- எனினும் சில நாட்களாக ஜியோ விலை உயர்வு செய்ய வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டுவிட்டது. ஆகவே, நெடுங்காலத்தில் சில விலை உயர்வுகளை மெதுவாக ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.
- கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்பந்தம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான TRAI மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் (DoT) இதற்கான முடிவுகளை எடுக்கும். அவர்கள் விலை உயர்வை அங்கீகாரம் அளிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.
- விலை உயர்ந்தால், இது பாவனையாளர்களின் பொருளாதார நிலையை பாதிக்கக்கூடும். சிறிய விலை உயர்வு, பயனர்களுக்கு பெரும்பாலான நஷ்டம் அளிக்காது.ஆனால் பெரிய விலை உயர்வு அதிர்ச்சியை உருவாக்கலாம்.விற்பனை சந்தையின் மாற்றங்களை கவனித்துப் பார்க்கும் போது . இது அடுத்த கட்டத்தில் விலை உயர்வை மெதுவாக செய்யக்கூடும், குறிப்பாக வேறு நிறுவனங்கள் அதை மேற்கொண்டால்.
- ஜியோ இப்போது விலை உயர்வை தீவிரமாக ஆதிகரிக்கக்கூடாது, ஆனால் அதனை மெதுவாக ஏற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறலாம்.அடுத்த நிலை, TRAI மற்றும் DoT இன் முடிவுகளுக்கு முற்றிலும் சார்ந்திருக்கும்.
- தற்போதைய நிலையில் இது எல்லாம் தேவை இல்லை .முகேஷ் அம்பானி, இந்த புதிய கட்டண கட்டமைப்பை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறாரோ என்னவோ சரியாக தெரியவில்லை.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், ஏர்டெல் நிறுவனத்தின் ரோஸ் (ROCE) வருமானம், அதாவது ரிட்டர்ன் ஆன் கேபிடல் எம்பிளாய்டு (Return on capital employed) வருமானம் 11% ஆகும். ஆனால் தொழில்துறையின் சராசரி உடன் ஒப்பிடும் போது இது குறைவாக உள்ளது. இது மேம்படுத்தப்பட வேண்டும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக வருமானம் ஈட்ட முடிந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று கூறியுள்ளார்.
ஏர்டெல் சிஇஓ கூறுவதை வைத்து பார்த்தால் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் இன்னும் அதிகமாக்கப்படும் என்பது போன்றே தெரிகிறது. ஒருவேளை 5ஜி டேட்டாவுடன் வரும் திட்டங்களின் விலைகள் மட்டும் அதிகப்படுத்தப்படலாம் அல்லது 5ஜி டேட்டாவிற்கென விலை அதிகமான புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படலாம். புதிய கட்டண கட்டமைப்பு என்றால் என்ன? என்கிற தெளிவான விளக்கம் முன்வைக்கப்படும். விலை குறையுமா இன்னும் அதிகமாகுமா என்கிற குழப்பம் நீடித்து கொண்டே தான் இருக்கும்.இதுபற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் வர உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu