சந்திரயான்-3: விக்ரம் லேன்டரின் இறுதிக்கட்ட வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி

சந்திரயான்-3: விக்ரம் லேன்டரின்  இறுதிக்கட்ட வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி
X

சந்திரயான்-3 தனது இறுதி டீபூஸ்டிங்கை வெற்றிகரமாக முடித்துள்ளது. 

நிலவின் தென் துருவத்தில் லேண்டரின் மென்மையான தரையிறக்கம் ஆகஸ்ட் 23 அன்று திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது.

சந்திரயான்-2 திட்டத்தில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சந்திரயான்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வருகிற 23ம் தேதி வெற்றிகரமாக இறங்க உள்ளது. அப்போது பழுதோ, சிக்கல்கள் ஏற்பட்டாலோ அதனை நிவர்த்தி செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, சந்திரயான்-3 திட்டமிட்டபடி சாதிக்கும்.

நிலவில் நீர் உள்ளதை கண்டறிந்துள்ளதைத் தொடர்ந்து வேறு மூலப் பொருள்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பயணம் வெற்றி பெறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் நிலவில் இறங்க உள்ள இடம் கரடு, முரடாக இல்லாமல் தரையிறங்க ஏதுவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டரில், "இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கையானது எல்எம் சுற்றுப்பாதையை 25 கி.மீ. x 134 கி.மீ.க்கு வெற்றிகரமாக குறைத்துள்ளது. தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு, நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும். இயங்கும் இறங்குதல் ஆகஸ்ட் 23, 2023 அன்று, சுமார் 17.45 மணி நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அதில் தெரிவித்துள்ளது

முந்தைய தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதால் இந்த முறை லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்காக லேண்டரின் அடிப்பகுதியில் 3 குட்டி ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, லேண்டர் மெதுவாக தரையிறக்கப்படும். அதற்குப் பிறகு 2 மணி நேரம் கழித்து லேண்டரில் இருந்து சாய்வுபலகை போன்ற அமைப்பின் மூலம் 'பிரக்யான் ரோவர்' வெளியே வந்து நிலவில் கால் பதிக்கும்.

இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவில் ஆய்வுப்பணியில் முழுவீச்சுடன் ஈடுபடும். 'சந்திரயான்-2' விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு நிலவின் மேல்பகுதியில் சுற்றிவரும் 'ஆர்பிட்டர்' என்ற கருவி, 'விக்ரம் லேண்டர்' மற்றும் 'பிரக்யான் ரோவரை' தொடர்ந்து கண்காணித்து தகவல்களை பெற்று, பெங்களூரு தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பணி மிகவும் நெருக்கடி நிறைந்த சவாலான பணியாகும். இதை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்துமுடிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!