ஆதார் பயனாளர்களுக்கு சேவை செய்ய புவன் ஆதார் வசதி –அப்படி அதில் என்ன இருக்கு?

ஆதார் பயனாளர்களுக்கு சேவை செய்ய புவன் ஆதார் வசதி –அப்படி அதில் என்ன இருக்கு?
X

Bhuvan aadhaar facility for Aadhaar users - ஆதார் பயனாளர்களுக்கு சேவை செய்ய புவன் ஆதார் வசதி –அப்படி அதில் என்ன இருக்கு?

Bhuvan aadhaar facility for Aadhaar users - நீங்கள் இருக்கும் இடத்தின் பின் கோடு (PIN Code) அடிப்படையிலும் ஆதார் சேவை மையங்களை தேடலாம். மாநிலங்களின் அடிப்படையிலும் ஆதார் சேவை மையங்களை தேடலாம்

Bhuvan aadhaar facility for Aadhaar users - மக்கள் வங்கிக் கணக்கு துவக்குதல், சமையல் எரிவாயு இணைப்பு பெறுதல் மற்றும் அரசாங்கப் பணிகள் அனைத்திற்கும் ஆதார் அட்டையின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் எண்ணை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் பயனாளர்களுக்கு தங்கள் சேவையை விரிவுபடுத்தும் பொருட்டு, UIDAI அமைப்பு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தேசிய தொலைநிலை உணர்திறன் மையத்துடன் (NRSC) இணைந்து 'புவன் ஆதார்' என்ற புதிய வசதியை தொடங்கியுள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த புதிய இணையதளம், இந்தியா முழுவதும் உள்ள ஆதார் மையங்கள் மற்றும் இருப்பிடங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Bhuvan aadhaar facility for Aadhaar users - ஆதார் கார்டில் புகைப்படம் மாற்றுவது, முகவரி மாற்றுவது உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள நாம் ஆதார் சேவை மையங்கள் நாடுகிறோம். ஆனால், சில சமயங்களில் நமக்கு அருகே ஆதார் சேவை மையம் எங்கே இருக்கிறது என்பதே தெரியாமல் இருக்கும். அந்த நேரத்தில், இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் புவன் ஆதார் இணையதளம் வாயிலாக அருகே உள்ள ஆதார் சேவை மையங்களை கண்டறியலாம்.

Bhuvan aadhaar facility for Aadhaar users - மேலும், நீங்கள் இருக்கும் இடத்தின் பின் கோடு (PIN Code) அடிப்படையிலும் ஆதார் சேவை மையங்களை தேடலாம். மாநிலங்களின் அடிப்படையிலும் ஆதார் சேவை மையங்களை தேடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil