டிவிட்டரில் மீண்டும் மாற்றம்... என்னங்க பண்றீங்க எலான் மஸ்க்?
டிவிட்டரின் லோகோவை மாற்றம் செய்து வெளியிட்டு டிவிட்டர் பயணிகளை ஒரு நிமிடம் ஷாக் அடைய வைத்திருக்கிறார் எலான் மஸ்க்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கினார். அன்றிலிருந்து தொடர்ந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார் மஸ்க். இந்நிலையில் டிவிட்டரின் லோகோவை மாற்றி திடீரென பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் அவர்.
நீல நிறத்தில் குருவி ஒன்று இருப்பதைதான் டிவிட்டர் தனது லோகோவாக வைத்திருக்கிறது. இந்நிலையில் மஸ்க் நாய் ஒன்றை லோகோவாக மாற்றியிருந்தார். ஜப்பானின் முக்கியமான நாய் இனமான ஷிபா இனுவின் முகத்தை லோகோவாக்கி வெளியிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
டாக்கிகாய்ன் எனப்படும் கிரிப்டோ கரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் இருக்கிறதாம். இதனை மீம்ஸ் மூலம் விளக்கி ஒரு பதிவையும் வெளியிட்டிருக்கிறார் அவர்.
2013ம் ஆண்டு நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் டாக்கி காய்ன். இது கிரிப்டோகரன்சி வகையிலானது என்றும் அதன் ஆதரவாளராக எலான் மஸ்க் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெஸ்லா டாக்கிகாய்னை வணிக பொருட்களுக்கான கட்டணமாக ஏற்றுக் கொள்கிறது என அறிவிப்பு வெளியிட்டிருந்தார எலான் மஸ்க். பிறகு ஸ்பேஸ் எக்ஸும் இதனை ஏற்றுக் கொள்ளும் என்றார்.
இப்படி செய்ததால் டாக்கிகாய்ன் மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவிகிதம் உயர்ந்தது. இதன்படி ஒரு ஏற்பாடுதான் இது என்றும் பலர் கூறுகின்றனர். இந்நிலையில் ஏன் இந்த மாற்றம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். டிவிட்டர் செயலியின் லோகோ மாற்றப்பட்டிருப்பதால் சில நிமிடங்கள் பயனாளர்கள் ஷாக் ஆகியிருந்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu