விண்வெளியில் சிறப்பாக செயல்படும் நட்சத்திர சென்சார்: பி.எஸ்.எல்.வி குழு

விண்வெளியில் சிறப்பாக செயல்படும் நட்சத்திர சென்சார்: பி.எஸ்.எல்.வி குழு
X

இன்ஜினியரிங் மாடலுடன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் ஸ்பேஸ் பேலோட் குழுவின் உறுப்பினர்கள் .

விண்வெளியில் நட்சத்திர சென்சார் சிறப்பாக செயல்படுவதாக பி.எஸ்.எல்.வி குழு தெரிவித்துள்ளது.

ஆஃப்-தி-ஷெல்ஃப் கூறுகளிலிருந்து உருவாக்கப்பட்ட புதிய குறைந்த விலை நட்சத்திர சென்சாரின் முதல் சோதனை வெளியீடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

வானியலாளர்களால் உருவாக்கப்பட்ட குறைந்த விலை நட்சத்திர சென்சார் சமீபத்தில் இஸ்ரோவால் பிஎஸ்எல்வி சி-55 இல் ஏவப்பட்டது. அதன் முதல் விண்வெளி சோதனையில், பிஎஸ்எல்வி சுற்றுவட்ட சோதனைப் பகுதியில் (POEM) பொருத்தப்பட்ட இந்த சென்சார் சிறப்பாக செயல்படுகிறது. செயற்கைக்கோள் எங்கு சுட்டிக்காட்டுகிறது என்பதை விரைவாகக் கணக்கிட வடிவமைக்கப்பட்ட இந்த குறைந்த விலை சென்சார் முதல் முறையாக விண்வெளியில் சோதிக்கப்படுகிறது.

சென்சாரிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மாதிரி படம்.

எந்தவொரு விண்வெளிப் பயணத்திற்கும், எந்த நேரத்தில் செயற்கைக்கோள் எங்கு சுட்டிக்காட்டுகிறது என்பதை அறிவது முக்கியம். இதனை அறிய பல வழிகள் இருந்தாலும், இந்த நட்சத்திர சென்சார் மிகத் துல்லியமான தகவலை வழங்குகிறது.

விண்வெளியில் இதன் செயல்திறனை மதிப்பிடுவது பிரதான நோக்கமாக இருந்த நிலையில், ஹோசகோட்டிலுள்ள இந்திய வானியற்பியல் கழகத்தின் CREST வளாகத்தில் அமைந்துள்ள விண்வெளி அறிவியலுக்கான எம்ஜிகே மேனன் ஆய்வகத்தில் அதற்கான சோதனைகள் செய்யப்பட்டன. சோதனை செய்யப்பட்ட சில தினங்களிலேயே, இந்த சென்சார் விண்வெளியில் எதிர்பார்த்தபடி செயல்படுவதை உறுதி செய்துள்ளதாக ஆய்வு மாணவர் ஒருவர் கூறினார்.

பி.எஸ்.எல்.வி குழுவுடன் பணிபுரிவது முழு அணிக்கும் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தென ரேகேஷ் மோகன் கூறினார். இக்குழுவில் மார்கரிட்டா சஃபோனோவா (DST பெண்-விஞ்ஞானி) மற்றும் ஜெயந்த் மூர்த்தி (பகுதி நேர பேராசிரியர்) ஆகியோரும் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!