பேஸ்ஃபுக் சில மாற்றங்கள்: இம்மாத இறுதிக்குள் நிறுத்தப்படும் சேவைகள்
பேஸ்ஃபுக் நிறுவனம் Nearby Friends, Wearther Aalert, Location History ஆகிய சேவைகளை இம்மாத இறுதிக்குள் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அளவில் முக்கிய பங்காற்றி வருவது பேஸ்ஃபுக். ஏப்ரல் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் சேவைகள் சட்டத்திற்கான விவரங்களை வரையறை செய்துள்ளது. இந்த விவரங்கள், பேஸ்புக், கூகுள் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பயனர்களின் டேட்டாக்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் இந்த மாத இறுதிக்கு பிறகு சில சேவைகளை நிறுத்துகிறது என்று தகவல் வெளியாகியது.
பேஸ்புக் அதன் லொகேஷன் சார்ந்த சேவைகளை ஜூன் மாதத்தில் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதற்கான சரியான காரணத்தை நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த அம்சங்கள் தொடர்பான அனைத்து பயனர் தகவல்களும் பேஸ்புக் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பேஸ்புக் பயனர்கள் இந்த அறிவிப்பை பேஸ்புக் மொபைல் செயலியின் மூலம் பெற்று வருகின்றனர்.
Nearby Friends என்பது மக்கள் தங்கள் தற்போதைய இருப்பிடத்தை அவர்களின் Facebook நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள அனுமதிக்கும் அம்சமாகும். வருகின்ற ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை மட்டுமே பயனர்கள் தங்கள் இருப்பிடத் தரவு மற்றும் location history ஆகியவற்றை அணுகவும், பதிவிறக்கவும் முடியும் என்று பேஸ்புக் அறிவித்தது. இந்த தேதிக்கு பிறகு, சேகரிப்பட்ட அனைத்து தரவுகளும் நிரந்தரமாக நீக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu