நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் வளர்ந்த செடி: ஆச்சர்யத்தில் நாசா
விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் தரும் விதமாக, நிலவு மண்ணில் விதைகள் முளைத்துள்ளன
வரலாற்றிலேயே முதல் முறையாக நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடியை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள். விண்வெளி ஆய்வில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை பொறுத்தே இந்த ஆய்வு பணிகள் அமைந்துள்ளன. சந்திரன் மட்டுமல்லாது பிற கிரகங்களிலும் இந்த ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை உலக நாடுகள் கூட்டாகவும், தனியாகவும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், நிலவில் சேகரிக்கப்பட்ட மாதிரி மண்ணை கொண்டு செடியை வளர்த்து அசத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.
சோதனையின் போது சந்திர மண் மாதிரிகளில் வளர்ந்து உயிர்வாழத் துவங்கியுள்ளது. இந்த மண்ணை, முதன் முதலில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் கொண்டு வந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட அதுபோன்ற பயணங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை.
1969 தொடங்கி நிலவில் இருந்து பாறைகள், கற்கள், மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்துள்ளனர் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். அதன் மொத்த எடை 382 கிலோ மாதிரிகளை நாசா . பத்திரமாக அதனை பதப்படுத்தி வைத்துள்ளதாம்.
அவர்களுக்கு ஆச்சர்யம் தரும் விதமாக, அந்த மண்ணில் இரண்டு நாட்களுக்குப் பிறகு விதைகள் முளைத்துள்ளன.
ஒவ்வொரு தாவரமும், நிலவின் மண் மாதிரியில் இருந்தாலும் , ஆறாவது நாள் வரை அவை ஒரே மாதிரியாக இருந்தன. அதன் பிறகு, அவற்றில் வித்தியாசங்கள் தோன்றின. நிலவு மண்ணில் வளர்க்கப்படும் தாவரங்கள் வளர்ச்சியில், மெதுவாக வளர்ச்சி குன்றியது.
சந்திர மண் பரிசோதனைக்காகக் குறிப்பாக தேல் க்ரெஸைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அதன் மரபணுவில் உள்ள ஒவ்வொரு நியூக்ளியோடைடிலிருந்தும் உயிரணுக்கள் வெளிப்படும். அதில் தோன்றும் மரபணுக்கள் வரை, அனைத்தும் மிகத் துல்லியமாக நமக்குத் தெரியும்
நிலவில் தாவரங்களை எவ்வாறு திறமையாக வளர்க்க முடியும் என்பதை இந்த ஆராய்ச்சி மூலம் அறிந்துகொள்ள முடியும். எனவே, இந்த ஆய்வுகள் மூலம், பூமி தாவரங்கள் சந்திர மண்ணுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை நன்கு புரிந்து கொள்ள அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் உதவும்
2019-ஆம் ஆண்டு ஜனவரியில், சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகள் முளைத்ததாக சீனாவின் தேசிய விண்வெளி முகமை தெரிவித்தது.
அதற்கு முன்பாக, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் தாவரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சீனாவின் சாங்'இ4 விண்கலம் 2019-ஆம் ஆண்டில் அதே முயற்சியை நிலவில் சாத்தியப்படுத்தியது.
விண்வெளி வீரர்கள் உணவுத் தேவைக்காக பூமிக்குத் திரும்பி வருவதற்கான தேவை இல்லாமல், விண்வெளியிலேயே தங்களுக்கான உணவை உற்பத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பு இந்த ஆய்வுகளின் மூலம் உருவாகலாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu