சாம்சங் நிறுவனத்தின் 4-வது மாடல் ஸ்மார்ட் போன்

சாம்சங் நிறுவனத்தின் 4-வது மாடல் ஸ்மார்ட் போன்
X

கேலக்ஸி எப்-22

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் வரிசையில் புதிதாக கேலக்ஸி எப்-22 ஜூலை 2-வது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் 4-வது மாடல் ஸ்மார்ட் போன் விரைவில் வெளிவரப்போகிறது.

தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு இந்திய சந்தைகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் எப் சீரிஸ் ஸ்மார் போன்கள் வரிசையில் புதிதாக உருவாகியுள்ள கேலக்ஸி எப்-22 ஜூலை 2-வது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்-22 என்ற எப் சீரிஸ் ஸ்மார்ட் போனை உருவாக்கியுள்ளது. 6.4 அங்குலத்தில் உருவாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன் 6000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. அல்மோண்ட் திரையுடன் 48MP திறன் கொண்ட கேமராவும் இந்த ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தைகளில் வரவேற்பை பெற்றுள்ள கேலக்ஸி எப் சீரிஸின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஃபிளிப்கார்ட் உடன் சாம்சங் கைக்கோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்சங் நிறுவனத்தின் இணையதளங்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் கேலக்ஸி சீரிஸில் இதற்கு முன்பு கேலக்ஸ் எப் 62, கேலக்ஸ் எப் 12, கேலக்ஸ் எப் 02 ஆகிய ஸ்மார்ட் போன்கள் வெளியாகியுள்ளன. கேலக்ஸி எப்-22 சாம்சங் நிறுவனத்தின் 4-வது ஸ்மார்ட் போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது