தீபாவளிக்கு ஆஃபர் தந்த அம்பானி..! ஜியோ பயனாளர்கள் ஒரே குஷி!

தீபாவளிக்கு ஆஃபர் தந்த அம்பானி..! ஜியோ பயனாளர்கள் ஒரே குஷி!
X
தீபாவளிக்கு ஆஃபர் தந்த அம்பானி..! ஜியோ பயனாளர்கள் ஒரே குஷி!

அம்பானியின் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி ஆஃபர் தந்துள்ளது. இந்த தகவலை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை முழுவதுமாக படியுங்கள். தீபாவளி தமாக்கா எனும் பெயரில் இந்த நிறுவனம் என்னென்ன திட்டங்களை அறிவித்துள்ளது என்பதைக் காண்போம்.

ரிலையன்ஸ் தீபாவளி தமாக்கா | Reliance Jio Diwali Dhamaka Offer

தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ட்ரூ 5 ஜி திட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் திட்டம்

90 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு திட்டமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை காலாண்டு திட்டம் என்கின்றனர்.

இரண்டாவது திட்டம்

365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டு திட்டம் என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டு திட்டங்களிலும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட 3350 ரூபாய் மதிப்பு கொண்ட நன்மைகள் கிடைக்கும்.

1 ஆண்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்தால், 3000 ரூபாய் மதிப்பு கொண்ட ஈஸ்மைட்ரிப் வவுச்சர் ஒன்றும், 999ரூ மற்றும் அதற்கு மேலான பர்ச்சேஸ்களுக்கு அஜியோவின் 200ரூ மதிப்புள்ள கூப்பன் ஒன்றும், பின் 150 ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்விக்கி வவுச்சர் ஒன்றும் கிடைக்கிறது.

இதன் வேலிடிட்டி என்பது இந்த தீபாவளிக்கு ரீசார்ஜ் செய்தால், அடுத்த தீபாவளி வரைக்கும் இந்த ஆஃபர் கிடைக்கிறது.

மேலும் வழக்கமான நன்மைகளைப் பொறுத்தவரையில், ரூ.899 மதிப்புள்ள காலாண்டுத் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ட்ரூ அன்லிமிடெட் 5ஜி நன்மைகள்,அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 2 ஜிபி டேட்டா + கூடுதலாக 20 ஜிபி டேட்டா என மொத்தம் 200 ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச SMSகள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்கள் இலவசமாக கிடைக்கும். இது 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

அடுத்து, 3599 ரூபாய் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம்.

இதில் 2.5 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு என மொத்தம் 912.5 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது. கூடவே தினமும் 100 இலவச SMSகள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்கள் இலவசமாக கிடைக்கும். இது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, மேற்கண்ட 2 திட்டங்களிலும் கிடைக்கும் வவுச்சர்கள் ஆனது, ரீசார்ஜ் செய்த பிறகு பயனர்களின் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். தேவையான போது அவைகளை ரீடீம் செய்துகொள்ளலாம்.

இலவசமாக கிடைக்கும் இந்த வவுச்சர்களை ரீடீம் செய்வது எப்படி ? | how to redeem jio voucher

  • ஜியோ வவுச்சரை ரிடீம் செய்ய, நீங்கள் MyJio ஆப்ஸைப் பயன்படுத்தலாம்:
  • MyJio பயன்பாட்டைத் திறந்து உள்நுழையவும்
  • எனது வவுச்சர் பகுதிக்கு கீழே உருட்டவும்
  • ரிடீம் ஐகானைத் தட்டவும்
  • செயல்முறையை முடிக்க கீழே உள்ள ரிடீம் என்பதைத் தட்டவும்
  • வவுச்சரைப் பெறுவதை உறுதிப்படுத்தவும்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!