சாதாரண மொபைல்போனிலும் இனி பணப்பரிவர்த்தனை செய்யலாம்: எப்படி தெரியுமா?
விஞ்ஞான, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் இன்று எல்லாமே, மொபைல்போன் செயலிகள் வாயிலாக மேற்கொள்ளும் வசதி வந்துவிட்டது. உணவு, உடை, வங்கிப் பரிவர்த்தனை என அனைத்தும் மொபைல் போனில், நொடிப்பொழுதில் மேற்கொண்டு வருகிறோம்.
டிஜிட்டல் முறையில், மொபைல் போன் வாயிலாக பண பரிவர்த்தனை செய்யும் வகையில், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு வசதியை, ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. இதெல்லாம் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் இருந்துதான் மேற்கொள்ள இயலும்.
சாதாரண பட்டன் செல்போன்களில் இருந்து பணப்பரிவர்த்தனை என்பது இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. இதற்கு தீர்வை, இந்திய ரிசர்வ் வங்கி ஏற்படுத்தித் தந்துள்ளது. இனி, சாதாரண போன் வைத்துள்ளோருக்கும், '123 பே' என்ற புதிய வசதியை, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், கடந்த, 2020 - 2021ம் நிதியாண்டில், 41 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடத்தது. அதுவே, 2021 - 2022ம் நிதியாண்டில் இதுவரை, 76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தது.
யு.பி.ஐ. வசதியை, சாதாரண போன் வைத்துள்ளோரும் பயன்படுத்தும் வகையில், இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சேவையைப் பெற, வங்கிக் கணக்குடன், தங்களுடைய மொபைல்போனை இணைத்தால் போதும். இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதனால், 40 கோடி பேர் பயனடைவர். மேலும், குக்கிராமங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி கிடைக்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu