7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட்

7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட்
X

இன்று விண்னில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி 56 ராக்கெட்

சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சார்' என்ற செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியாக 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி காலை 6.30 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சார்' என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த 'டிஎஸ்-சார்' செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. DS-SAR செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட்டு, செயல்பட்டால், சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் செயற்கைக்கோள் படத் தேவைகளை ஆதரிக்கப் பயன்படும்.

'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கை கோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும். இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

மற்ற செயற்கை கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. செயற்கை கோள்களை செலுத்தும் பணி வெற்றிகரமாக நிறைவேறியதாகவும், பிஎஸ்எல்வி-சி56 வாகனம் 7 செயற்கை கோள்களையும் அவற்றின் சுற்றுப்பாதையில் துல்லியமாக செலுத்தியதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய சில வாரங்களுக்குப் பிறகு மற்றொரு முக்கிய நிகழ்வாக, இன்று 7 செயற்கை கோள்களை செலுத்தியிருப்பது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் மற்றொரு மைல்கல்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!