போகோ எம்3 ப்ரோ 5G ; இந்தியாவில் இன்று விற்பனை துவக்கம்
பிரபல போகோ ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்கின்றது.
போகோ எம் 3 ப்ரோ 5G என்ற புதிய மாடல் பட்ஜெட் ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது. போகோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் முதல் 5 ஜி ஸ்மார்ட் போன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மடலை உலக சந்தையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போகோ நிறுவனம் தனது பட்ஜெட் மாடல் ஸ்மார்ட் போனை தற்போது வெளியிடவுள்ளது. போகோ எம்3 ப்ரோ மாடல் ஐரோப்பிய சந்தையில் 179 யூரோக்களுக்கு விற்பனையாகவுள்ள நிலையில் இந்திய சந்தையில் 15,995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட் போனை மக்கள் பிளிப்கார்ட் தலத்தில் வாங்கலாம் என்றும் போக்கோ நிறுவனம் கூறியுள்ளது.
பவர் பிளாக், போக்கோ எல்லோ, கூல் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளியிடப்படவுள்ளது.
இதன் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு.
18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
யூஎஸ்பி டைப் சி
பக்கவாட்டு கைரேகை சென்சார்
48 எம்பி மெயின் கேமரா
2 எம்பி டெப்த் கேமரா
2 எம்பி மேக்ரோ கேமரா
மற்றும் 8 எம்பி செல்பி கேமரா
ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12 தளத்தில் செயல்படும்
6.5 இன்ச் எல்சிடி ஸ்கிரீன்
கார்னிங் கொரில்லா கிளாஸ்
ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 ப்ராசசர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu