டேப்லெட் பிரியர்களே கொஞ்சம் பொறுங்க !! பல அப்டேட்டோட வந்துகிட்டு இருக்கு OPPO Pad 3

டேப்லெட் பிரியர்களே கொஞ்சம் பொறுங்க !! பல அப்டேட்டோட வந்துகிட்டு இருக்கு  OPPO Pad 3
X
மொபைல் போன் நிறுவனத்தில் சிறந்து விளங்கி கொண்டிருக்கும் oppo நிறுவனத்தின் புதிய டேப்லெட் பற்றிய விவரங்கள் அறிவித்துள்ளது.அவை என்ன என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

அடுத்தடுத்து வந்துக்கிட்டே இருக்கே ,ஏகப்பட்ட அம்சத்தோடு ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு டேப்லெட்ட ஓப்போ கம்பெனில அறிவிச்சுருக்காங்கய்யா அம்புட்டும் இந்த டேப்லெட்டுல இருக்கு, இதுல இருக்குற வசதியெல்லாம் தெரிஞ்சிக்கோங்க... வாங்க அத பத்தி பாக்கலாம் .....

ஓப்போ Pad 3 என்பது ஓப்போ OPPO நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆகும். இது ஓப்போவின் முந்தைய டேப்லெட்டுகளின் தொடர்ச்சியாக, சிறந்த செயல்பாடு, சிறப்பான திரை, மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டதாக அறிமுகமாகும். இதன் முழுமையான விவரங்கள், இதுவரை வெளியான தகவல்களுக்கு ஏற்ப, கீழே உள்ளவாறு உள்ளன.

ஓப்போ Pad 3 இது சிறப்பான அம்சங்களுடன் பெரிய டிஸ்பிளே , அதிக திறன் கொண்ட பேட்டரி , ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் , டேப்லெட் அனுபவத்தை சிறக்க செய்யும் ஸ்டைலஸ் சப்போர்ட் போன்ற பல ஆதரவுகளை பட்ஜெட் செக்மென்ட்டில் வழங்கும் ஒரு சாதனமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஓப்போ பேட் 3 டேப்லெட் சாதனம் டேப்லெட் சந்தையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

ஓப்போ நிறுவனம் அதன் புதிய ஒப்போ பேட் 3 டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனத்தை ஒப்போ நிறுவனம் மிக விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஓப்போ பேட்3 (Oppo pad 3) டேப்லெட் சாதனத்தின் அறிமுகத்தை உறுதி செய்யும் விதமாக, நிறுவனம் இப்போது புதிய டீஸர்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இதன் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமாக வண்ணங்களுடன் வருகிறது. இந்த புதிய டேப்லெட் பர்பிள், ப்ளூ மற்றும் சில்வர் கலர் நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஓப்போ பேட் 3 டேப்லெட் OPPO Pad 3 Tablet) 8GB + 128GB, 8GB + 256GB, 12GB + 256GB and 12GB + 512GB மாடல் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனம் 11.6" இன்ச் 2.8K LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே சாதனம் 144Hz ரெஃப்ரஷ் ரேட் Refresh rate உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய ஓப்போ பேட் 3 டேப்லெட் (OPPO Pad 3 Tablet) சாதனம் 9510mAh பேட்டரி உடன் 67W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் எடை 533 கிராம் ஆகவும், இது 19 கிராம் ஓப்போ பேட் 2 சாதனத்தை விட குறைந்த எடையை கொண்டுள்ளது என்றும் ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ. 29,000 முதல் ரூ. 35,000 விலைக்குள் இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய ஓப்போ டேப்லெட் (OPPO Tablet) சாதனம் ஆண்ட்ராய்டு 15 உடன் கலர் ஓஎஸ் 15 (Android 15-based ColorOS 15) இல் இயங்கும். இந்த புதிய டேப்லெட் குவாட் ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மாஸ், டால்பி விஷன் உடன் வெளிவரும்.

இந்த ஓப்போ பேட் 3 டேப்லெட் சாதனம் சக்தி வாய்ந்த டைமென்சிட்டி 8350 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் ஓப்போ போனின் ஓப்போ ரெனோ 13 ப்ரோ சாதனத்தில் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓப்போ நிறுவனம் இந்த புதிய டேப்லெட் சாதனத்தை ஓப்போ ரெனோ 13 சீரிஸ் OPPO Reno 13 series போன்களுடன் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.குறிப்பாக வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதிவெளியாகும் என்று கூறப்பட்டு உள்ளது .

ஓப்போ Pad 3, அனைத்து வகையான பயனர்களுக்கும், தொழில்நுட்ப விரும்பிகளுக்கும், மாணவர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். உயர்ந்த செயல்திறன், சிறந்த திரை, மற்றும் பயனுள்ள செயலிகளுடன் இந்த டேப்லெட் சந்தையில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த டேப்லெட்டை பற்றி கூடுதல் தகவலுக்கு, ஓப்போவின் அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடுவது நல்லது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு