ஒன்பிளஸ் டிஸ்பிளே கோடு பிரச்சனையா? இதை முதலில் படியுங்க..

ஒன்பிளஸ் டிஸ்பிளே கோடு பிரச்சனையா? இதை முதலில் படியுங்க..
X
ஒன் பிளஸ் மொபைல் போன் நீங்கள் உபயோகிப்பாளரா? டிஸ்பிளே கோடு பிரச்சனையை சரிசெய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

ஒன் பிளஸ் மொபைல் போன் நீங்கள் உபயோகிப்பாளரா? மொபைல் போனை அப்டேட் செய்ததற்குப்பின் உங்களுடைய டிஸ்பிளேவில் திடீரென பல்வேறு வண்ணத்தில் கோடு விழுந்தால் உடனே டிஸ்பிளேவை மாற்ற வேண்டாம். பொதுவாக டிஸ்பிளே மாற்றுவதற்கு ரூ.10000 வரை செலவாகும். ஆனால் செலவே இல்லாமல், இந்த டிஸ்பிளே பிரச்சனையை நீங்கள் எப்படி செலவே இல்லாமல் டிஸ்பிளேவை மாற்றுவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

ஏராளமான பயணர்கள் மொபைலை அப்டேட் செய்தால்தான் இந்த பிரச்சனை வருகிறது நினைக்கிறார்கள். அப்டேப் செய்யாமலேயே இந்த பிரச்சனை வருகிறது. இதற்கென உள்ள சர்வீஸ் சென்டரில் சென்று கேட்டால், பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால் இந்த பிரச்சனை வந்திருக்கும் எனவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் சொல்வதில்லை எனவும் பயனர்கள் புலம்பி வருகின்றனர்.

ஏராளமான பயனர்கள் சர்வீஸ் சென்டருக்கே சென்று வந்தும் இந்த டிஸ்பிளேவில் கோடு வரும் பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என புலம்பி வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன?

மும்பையில் ஒரு சர்வீஸ் சென்டரில் தொழில்நுட்ப பொறியாளர் ஒருவர் இதனை இலவசமாக டிஸ்பிளே கோடுகளை நீக்கி சரிசெய்து கொடுத்து வருகிறார். மேலும் இதனை சரிசெய்யும் விதத்தை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். இந்த சர்வீஸ் சென்டரில் இதே பிரச்சனைக்கு ஏராளாமானோர் குவிந்துள்ளனர். பாம்பே டான் (Bombay Donn) என்ற யூடியூப் தளத்தில் இதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் தொழில்நுட்ப பொறியாளர் கூறுகையில், ஒன்பிளஸ் மொபைலின் மாடல்களான 8, 8டி, 9ஆர்டி, 9டி ஆகிய மாடல்களில் சாப்ட்வேர் அப்டேட் செய்யும்போது டிஸ்பிளேவில் கோடு விழும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு அப்டேட் செய்யும்போது சாப்ட்வேர் பிரச்சனையிலிருந்து ஹார்டுவேர் பிரச்சனையாக மாறுகிறது. இந்த பிரச்சனையாக வரும் பயனர்களுக்கு இலவசமாகவே சரிசெய்து கொடுத்து வருகிறோம். இருந்தாலும் ஒன்பிளஸ் நிறுவனத்திலிருந்து சில வழிகாட்டல் கொடுத்துள்ளார்கள்.

தண்ணரில் விழுந்திருக்கக்கூடாது. மொபைல்போன் அதிகளவில் உடைந்திருக்கக்கூடாது. பெரிய பிரச்னைகள் மொபைலில் வந்திருக்கக்கூடாது. இந்த 3 பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் அந்த மொபைலை இலவசமாக சரிசெய்து கொடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொருவர் தெரிவிக்கையில், ஒன்பிளஸ் கேர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பிக்கப் ஆப்ஷன் மூலமாக நிறுவனத்திற்கு மொபைலின் படத்தை அப்லோடு செய்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் வந்த பதிலில் இந்த மொபைலில் சிறிய சிராய்வு உள்ளதாால் சரிசெய்ய முடியாது என தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தனது நண்பர் மூலமாக ஒன்பிளஸ் நிறுவன மண்டல மேலாளரின் இமெயில் முகவரிக்கு புகாரளித்துள்ளார். அவர் கோயம்பத்தூர் சர்வீஸ் சென்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். பின்னர் அந்த சர்வீஸ் சென்டருக்கு தொடர்பு கொண்டபோது மறுபடியும் சரி செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு நிறுவனத்திலிருந்த வந்த தகவலை அனுப்பியுள்ளார். அதன்பின் மொபைலை வாங்கிச் சென்று சுமார் 18 நாட்கள் கழித்து சரிசெய்து கொடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா