'எஸ்எச்ஜி – 95' புதிய ரக மாஸ்குகள் அறிமுகம்- மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை தகவல்.
‘எஸ்எச்ஜி – 95’ புதிய ரக மாஸ்குகள்
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நோயாளிகள் என பரவலாக அனைவரும் பயன்படுத்தி வந்த N- 95 மாஸ்க்குகளுக்கு மாற்றாக புதிய ரக மாஸ்குகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உலக சுகாதர அமைப்பு கிருமிநாசினி மற்றும் முகக்கவசங்களையும் பரிந்துரைத்தது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அனைவரும் N – 95 முகக்கவசங்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த ரக மாஸ்குகளை மறு உபயோகம் செய்வதற்கும், விலையின் அடிப்படையிலும் சில சிக்கல்கள் இருந்தது.
இதனால் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில், ஐகேபி நாலேஜ் பார்க் போன்ற அமைப்புகள், ஹைதராபாத் டெக்னாலஜிஸ் தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கி 'எஸ்எச்ஜி – 95' என்கிற பல அடுக்குகளை கொண்ட வீரியமிக்க முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசங்கள் 90% மாசு துகள்களிலிருந்தும், 99% தீநுண்மி நுண்ணிய கிருமிகளில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய உஷ்ணமான சூழ்நிலைக்கு உகந்ததாகவும் இருக்கும். இதற்கான தயாரிப்பு பணிகளை சுயநிதி குழுக்களிடம் தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. ரூ.50 முதல் 75 வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசம் மீண்டும் உபயோகிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu