இளைஞர்கள் மத்தியில் தனி சிறப்பை பெற்று வரும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம்

இளைஞர்கள் மத்தியில் தனி சிறப்பை பெற்று வரும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம்
X

ஸ்மார்ட்போன் சந்தையில் விலையுர்ந்த சாதனங்களை விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் iOS 15 ஆப்பரேட்டிங் சிஸ்டமினை அறிமுகம் செய்துள்ளது. இந்த தகவல் ஆப்பிள் பயனர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

நாட்டில் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களை கவரும் வகையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பல புதிய அம்சங்களுடன் வெளியிட்டு வருகின்றனர். இருந்தும் இளைஞர்கள் மத்தியில் தனி சிறப்பை பெற்று வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் அதிக விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் பயனர்கள் அதிக அளவில் இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை விரும்பி வருகின்றனர். காரணம் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் தற்போதைய காலத்தில் இளைஞர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள், iOS 15 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் பயனர்களுக்கான பல விரும்பத்தக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கும் என்றும் பயனர்களின் பிரைவசிக்கு இந்த தளம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த தளத்தின் பீட்டா வெர்சன் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இதன் iOS அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது iOS 14 இயங்கு தளத்தில் இயங்கி வரும் அனைத்து ஐபோன்களுக்கும் இயங்கு தளத்தின் அப்டேட் வெர்சனாக iOS 15 செய்லபடும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஐபோன் 6s மற்றும் ஐபோன் SE முதல் தற்போது புதிதாக வெளியான அனைத்து மாடல் போன்களுக்கும் iOS 15 பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil