அதிசய புகைப்படம்...! கருந்துளையுடன் மோதும் நட்சத்திரம்! கண்முன்னே அரிய நிகழ்வு..!
பெரிய கருந்துளை ஒன்று ஒரு நட்சத்திரத்திலிருந்து பிரிந்து இன்னொரு நட்சத்திரத்துடன் மோதும் காட்சியை வெளியிட்டுள்ளது நாசா. நாசாவுடன் இணைந்து இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி உதவியுடன் இந்த தரவுகளைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் மற்றும் நாசாவின் விண்வெளி ஆய்வகங்கள் பல அரிய நட்சத்திர வெடிப்புகளை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் அறிவியல் வரலாற்றிலேயே சிறந்த ஒரு சம்பவமாக, இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் வியப்படையும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
சாதாரணமா இந்த படங்களை நாம் அப்படியே பார்த்துவிட முடியாது. தொலைநோக்கியில் பதிவாகும் காட்சிகளை நாம் மெய்நிகர் தொழில்நுட்பம் அதாவது விர்ச்சுவல் டெக்னாலஜி மூலம் அதை தோராயமாக வரைந்து வெளியிடுவதுதான் வழக்கம். அதற்கு முன்பு கிடைக்கப்பெற்ற தகவல்களும் பயன்படும்.
சந்திரா எக்ஸ்ரே மற்றும் ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படம் மேலே சின்ன கட்டத்தில் இருப்பது. அதை பெரிதாக்கி பொதுமக்களுக்கு புரியும் வகையில் விரிவாக்கி கொடுத்தது இந்த பெரிய படம்.
2015ம் ஆண்டிலிருந்து இஸ்ரோவால் அனுப்பப்பட்ட வானியல் தொலைநோக்கியான ஆஸ்ட்ரோசாட் பூமியைச் சுற்றிக்கொண்டே அண்ட வெளிகளில் புலப்படம் கதிர்களை பதிவு செய்து வருகிறது. அப்படி செய்யும் வேலையில் ஒன்றாக நாசாவுடன் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பையும் பதிவு செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu