Netflix, Amazon லாம் அவ்ளோதான்.. இறங்கி அடிக்கும் ஜியோசினிமா.. மலிவு விலை திட்டங்கள்!
ரிலையன்ஸ் ஜியோ அதன் மூலம் கிடைக்கும் இலவச 4ஜி சேவை என இந்தியாவில் பாதிக்கு பாதிபேர் தற்போது வரை அனுபவித்துக் கொண்டிருக்கும் சலுகைகள் நம்மை பழக்கப்படுத்திக் கொண்டு விட்டன. இனிமேல் நாமே நினைத்தாலும் ஜியோவை விட்டு போகமாட்டோம் என்கிற நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இலவசமாக கொடுத்துவிட்டு பின் அது நமக்கு மிகவும் பழக்கமான பிறகு குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம். கட்டணம் வசூலிக்கும்போதும் கூட மற்ற போட்டியாளர்களை விட கொஞ்சம் கூடுதல் சலுகைகளைக் கொடுத்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் இப்போது ஜியோ சினிமாஸையும் இலவசமாக கொடுத்து வருகிறார்கள்.
தற்போது இதே தந்திரத்தைதான் ஜியோ சினிமாவும் பின்பற்றி வருகிறது. கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கிய ஐபிஎல் 2023 தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமாஸ் வாங்கியது. அதனை தங்களது ஆப்பில் இலவசமாக கொடுத்து வருகிறார்கள். பல வித வசதிகளையும் அம்சங்களையும் கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆப்பில் பல மொழி திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் ஸ்ட்ரீமிங் ஆகும் என்றும் தெரிகிறது. ஆனால் இப்போதைக்கு ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிபரப்பி வரும் ஜியோ, அடுத்து மெல்ல மெல்ல கட்டணத்துக்கு மாறுவார்கள் என்கிறார்கள்.
ஐபிஎல் 2023 முடியும்போது கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அது 3 முக்கிய சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது.
ஒரு நாள் சந்தா, தங்க சந்தா, பிளாட்டின சந்தா என 3 சந்தா திட்டங்கள் இருக்கிறது. இவை வரும் ஜூன் மாதத்திலிருந்து அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது. அதில் ஒரு நாள் சந்தா என்பது பெயரில் குறிப்பிட்டுள்ளபடி, 24 மணி நேரம் பார்க்கும் வசதியைத் தருகிறது. இந்த சந்தாவைப் பெறுவதன் மூலம் ஒரு நாள் நீங்கள் அந்த ஆப்பில் இருக்கும் சப்ஸ்கிரிப்சன் கண்டென்ட் களைப் பார்க்கலாம்.
அடுத்து தங்க சந்தா என்பது 3 மாதங்களுக்கு தரப்படுகிறது. மேலும் பிளாட்டின சந்தா ஒரு வருட திட்டமாகும்.
ஒரு நாள் சந்தாவின் விலை ரூ.29 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் அதனை ரூ.2 க்கு வழங்கப்போகிறது அதேபோல ரூ.299 கொண்ட தங்க சந்தாவை ரூ.99 க்கு வழங்கப்போகிறது ஜியோ சினிமாஸ்.
பிளாட்டின சந்தாவுக்கு ரூ.1199 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் ரூ. 599க்கு வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. இவை அனைத்தும் இப்போதைக்கு அமல்படுத்தப்படவில்லை என்றாலும் வரும் ஜூன் மாதம் முதல் இது கட்டணமாக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விலை மாறுபாடு இருந்தாலும் தரம் 3 சந்தாக்களிலும் ஒரேமாதிரிதான் இருக்கப்போகிறது. மேலும் முதல் இரண்டு சந்தாக்களிலும் 2 சாதனங்களில் ஒரே நேரத்தில் ஒரே கணக்கை பயன்படுத்த முடியும். அதேநேரம் பிளாட்டினம் 4 சாதனங்களை பயன்படுத்தும் வசதியைத் தருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu