ப்ரைமா 2 என்ற டுயல் சிம் போனை அறிமுகபடுத்தவுள்ளது ஜியோ நிறுவனம்
ஜியோபோன் ப்ரைமா 2 டூயல் சிம் மாடல் விரைவில் அறிமுகம்
ஜியோவின் அடுத்தடுத்த 4ஜி பீச்சர் போன் அறிமுகம்
ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்த்தால், அது மீண்டும், மீண்டும் 4ஜி பீச்சர் போன்களையே அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வெளியான தகவலில், ஜியோ நிறுவனம் டூயல் சிம் ஆதரவுடன் ஜியோபோன் ப்ரைமா 2 மாடலை அறிமுகம் செய்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்பு சிங்கிள் சிம் ஆதரவுடன் ஜியோபோன் ப்ரைமா 2 போன் வெளிவந்தது.
BIS சான்றிதழில் காணப்படும் ஜியோபோன் ப்ரைமா 2 டூயல் சிம்
BIS சான்றிதழ் தளத்தில் JFP1AE-DS என்ற மாடல் நம்பர் உடன் ஜியோ போன் காணப்பட்டுள்ளது. DS என்பது டூயல் சிம்மை குறிக்கும். இது டூயல் சிம் கொண்ட ஜியோபோன் ப்ரைமா 2 தான் என்று கூறப்படுகிறது. மற்றபடி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஜியோபோன் ப்ரைமா 2 அம்சங்களுடன் இந்த டூயல் சிம் கொண்ட மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஜியோபோன் ப்ரைமா 2 அம்சங்கள்
அம்சம் | விபரம் |
---|---|
டிஸ்பிளே | 2.4 இன்ச் அளவு கொண்ட வளைந்த டிஸ்பிளே |
ரேம் | 512MB |
ஸ்டோரேஜ் | 4GB (128GB வரை நீட்டிப்பு ஆதரவு) |
பிராசஸர் | குவால்காம் இன் பிராசஸர் |
கேமரா | 0.3MP ரியர் மற்றும் ஃப்ரண்ட் கேமரா |
பேட்டரி | 2000mAh |
ஆப்பரேட்டிங் சிஸ்டம் | KaiOS 2.5.3 |
ஆதரிக்கும் மொழிகள் | 23 மொழிகள் (தமிழ் உட்பட) |
ஆப்ஸ் ஆதரவு | வீடியோ காலிங், கூகுள் அசிஸ்டண்ட், யூடியூப், ஃபேஸ்புக், ஜியோசாட், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோசாவ்ன் |
ஜியோ பே ஆதரவு
குறிப்பாக ஜியோ பே யுபிஐ செயலி ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். எனவே QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் அனுப்ப உதவும் இந்த போனின் கேமரா.
நீண்ட நேர பேட்டரி பேக்கப்
இந்த ஜியோபோன் ப்ரைமா 2 ஆனது 2000mAh பேட்டரி உடன் வருகிறது. எனவே இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
வாரண்டி விபரம்
குறிப்பாக இது 1 வருட உத்தரவாதத்துடன், 6 மாத இன்பாக்ஸ் சாதனங்களின் வாரன்டி உடன் அறிமுகமானது.
ஜியோபோன் ப்ரைமா 2-ன் விலை
அதேபோல் இந்த போன் ரூ.2,799 விலையில் வெளிவந்தது.
டூயல் சிம் மாடல் உயர்வான விலையில் வெளிவர வாய்ப்பு
விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள டூயல் சிம் கொண்ட ஜியோபோன் ப்ரைமா 2 மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஜியோவின் 5ஜி போன் அறிமுக எதிர்பார்ப்பு
குறிப்பாக ஜியோ நிறுவனம் 4ஜி பீச்சர் போன்களை விட 5ஜி போன்களை அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu