ஜியோ நிறுவனத்தின் புதிய சேவை அறிமுகம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி ஜியோ வாடிக்கையாளர்கள் இப்போது வாட்ஸ் அப் வழியாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து தற்போது ரீசார்ஜ் செய்வது துவங்கி EB பில், பண பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக செய்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சில அதிரடியான சேவைகளை அறிவித்துள்ளது.
அதன் படி ஜியோ பயனர்கள் போன் ரீசார்ஜ், ஜியோ இணைய சேவை, ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ சிம் ஆகியவற்றை வாட்ஸ்அப் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அந்த சேவைகளை பெற்றுக்கொள்ள ஜியோ சிம் பயனர்கள், ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய எண்ணை சேமித்து வாட்ஸ் அப் சேவைகளை துவங்க வேண்டும். இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் Paytm, PhonePe, Google Pay, Amazon Pay போன்றவற்றில் ரீசார்ஜ் செய்யும் முறைகளை வாட்ஸ் அப் வழியாகவும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இதற்கு முதலாவதாக,
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசியில் ஜியோ கேரின் 7000770007 எண்ணை சேமிக்க வேண்டும். பிறகு அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு 'ஹாய்' என மெசேஜ் அனுப்ப வேண்டும். பின்னர் Main Menu விருப்பம் வாட்ஸ் அப் வழியாக அனுப்பப்படும். அதில் 'ஜியோ சிம் ரீசார்ஜ்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சேவைகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் மொழிகளை சேர்த்து கொள்ளலாம்.
தொடர்ந்து வாட்ஸ்அப் வழியாக ரீசார்ஜ் செய்யும் போது, ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கப்படும். இதில் நீங்கள் விரும்பும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுத்ததும், பணம் செலுத்துவதற்கான ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைதளம் திறக்கும். பிறகு அதற்கான பணத்தை நீங்கள் செலுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் புதிய ஜியோ சிம் அல்லது Port-In (MNP) உள்ளிட்ட பல சேவைகளை வாட்ஸ் அப் வழியாக பெறலாம். இது தவிர ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்ள் கொரோனா குறித்த தகவல்களை வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu