வியாழன் கோளின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து 10 பில்லியன் டாலர் செலவில் 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் தங்கத்துடன் பெர்லியம் பூசப்பட்ட குவி ஆடி கண்ணாடிகள் உள்ளன. இதனால் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்கள், சிறுகோள்களை படம் எடுக்க முடியும்.
அந்தவகையில் இந்த தொலைநோக்கி தற்போது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனின் படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. நாசா இதை பிராசஸ் செய்து வெளியிட்டுள்ளது.
"உண்மையில் இது இவ்வளவு அழகாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார் கோள் வானியலாளர் இம்கே டி பேட்டர். தொடர்ந்து, "ஜேம்ஸ் வெப்பின் ஒரு புகைப்படத்திலேயே அனைத்தும் தெரிகிறது. வியாழனில் வளையங்கள், சிறிய செயற்கைக்கோள்கள் விண்மீன் திரள்கள் இருப்பதை காணமுடிகிறது" என்றார்.
பாரிஸ் ஆய்வக பேராசிரியர் தியரி ஃபோச்செட் கூறுகையில், "நாசா வெளியிட்ட இரண்டாவது படத்தில், வியாழன் கிரகத்தில் வளையங்கள், சந்திரன்கள் இருப்பதை காணமுடிகிறது. இது ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும்" என்றார்.
நாம் இணையத்தில் பார்க்கும் படங்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் அல்ல. அதாவது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து அனுப்பிய வடிவத்தில் இருக்காது. இதை விஞ்ஞானிகள் பிராசஸ் செய்து புகைப்படங்களாக மாற்றுகின்றனர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் லைட் டிடக்டார் (light detectors) சேகரித்த தகவல்களை தொகுப்பாக மாற்றி விஞ்ஞானிகள் பிராசஸ் செய்கின்றனர். STScI (Space Telescope Science Institute) இல், இந்தத் தகவல் தொகுப்புகள் பிராசஸ் செய்யப்பட்டு செயலாக்கப்பட்டு, புகைப்படங்களாக மாற்றப்படுகிறது.
முன்னதாக ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி, 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து துல்லியமான புகைப்படம் எடுத்து அனுப்பி உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu