ஆதார் கார்டுல மாற்றம் செய்யணுமா? இப்போவே போயி மாத்திகோங்க கடைசி தேதி ரொம்ப நெருங்கிடிச்சி..!

ஆதார் கார்டுல மாற்றம் செய்யணுமா? இப்போவே போயி மாத்திகோங்க கடைசி தேதி ரொம்ப நெருங்கிடிச்சி..!
X
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 14-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆதாரில் புகைப்படத்தை இலவசமாக அப்டேட் செய்ய டிசம்பர் 14 கடைசி நாள்!

ஆதாரில் புகைப்படத்தை இலவசமாக அப்டேட் செய்ய டிசம்பர் 14 கடைசி நாள்!

ஆதாரில் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 14-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாத விவரங்களை புதுப்பிக்க UIDAI பரிந்துரை

அதுவும் 10 வருடங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஆதார் விவரங்களை தற்போது அப்டேட் செய்து வைக்குமாறு UIDAI பரிந்துரை செய்துள்ளது.

ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்யக்கூடிய விவரங்கள்

  • பெயர்
  • முகவரி
  • பிறந்த தேதி

ஆஃப்லைனில் மட்டுமே அப்டேட் செய்யக்கூடிய விவரங்கள்

  • கருவிழி
  • கைரேகைகள்
  • மொபைல் நம்பர்
  • புகைப்படம்

இலவச ஆன்லைன் அப்டேட்டிற்கான இணைய தள முகவரி

குறிப்பாக டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களைச் செலவின்றி அப்டேட் செய்ய விரும்பினால் myaadhaar.uidai.gov.in என்ற UIDAI இணையதளத்துக்குச் செல்லுங்கள்.

ஆதார் புகைப்படத்தை அப்டேட் செய்வதற்கான வழிமுறைகள்

  1. முதலில் https://uidai.gov.in/en/ என்ற இந்த யூஐடிஏஐ (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) பதிவிறக்கம் செய்து பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் இந்த படிவத்தை அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் இருந்தும் பெறலாம்.
  2. அடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்த அந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவும். அதன்பின்பு அந்த படிவத்தை உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் சென்று, ஆதார் சேவை மைய அதிகாரியிடம் அளிக்கவும்.
  3. அதன்பின்பு ஆதார் சேவை மையத்தில் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை அளிக்க வேண்டும். அனைத்தையும் சரியாக அளித்த பின்பு ஆதார் சேவை மைய அதிகாரி உங்களை அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொள்வார்.
  4. அதேபோல் அந்த ஆதார் சேவை மையத்தில் உங்களுக்கு ஒரு யூஆர்என் (URN) எண் அதற்கான ஒப்புதல் படிவத்துடன் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு உங்களுக்குச் சேவையின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஆதார் அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள் தேவையில்லை
புகைப்படத்தை அப்டேட் செய்ய

ஆதார் அட்டையின் முக்கியத்துவம்

குறிப்பாக இந்திய மக்களின் முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்று. வங்கி, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் ஆதார் இந்த அட்டை தேவைப்படுகிறது. அதேபோல் கேஒய்சி சரிபார்ப்பிற்குத் தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் ஆதார் கார்டு தான் முன்னிலையில் இருக்கிறது. எனவே அனைத்து விஷயங்களுக்கும் தேவைப்படும் இந்த ஆதார் கார்டை அப்டேட் செய்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.


Tags

Next Story
ai in future agriculture