அதிர்ச்சி ஐடியா..! ஒரே ஒரு இமெயில்.. வெளியிலிருந்தே உங்க செல்போனில் ‘App Install’ எப்படி?

அதிர்ச்சி ஐடியா..! ஒரே ஒரு இமெயில்.. வெளியிலிருந்தே உங்க செல்போனில் ‘App Install’ எப்படி?
X
உங்கள் செல்போனில் உள்ள இமெயில் மற்றும் கடவுச் சொல்லை வைத்து வேறொருவர் வெளியிலிருந்தே அனைத்துவிதமான மொபைல் செயலிகளை நிறுவலாம்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட் போன்களின் தாக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதேபோல் சாதரண போனை உபயோகிப்பவர்கள் கூட தற்போது ஸ்மார்ட் போனை உபயோகிக்க கற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளை விட ஸ்மார்ட் போன்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்து வருகிறது.

இதனிடையே ஏராளமான ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அதன் உற்பத்தியை மக்களிடையே கொண்டு செல்லவும், பயன்பாட்டை அதிகப்படுத்தவும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏராளமான புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்களுக்கு ஒரு வகையில் மகிச்சியை தந்தாலும், அதில் உள்ள தொழில்நுட்பங்கள் பல்வேறு அவர்களை சிக்கல்களுக்குள் தள்ள நேரிடுகிறது.

குறிப்பாக கடன் மொபைல் செயலிகள், யுபிஐ செயலிகள் உள்ளிட்டவைகளால் மக்கள் தங்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை இழக்க நேரிடுகிறது. அவ்வாறு இழக்கும் பணத்தை பெற சைபர் கிரைம் துறை இருந்தாலும், ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப உள்ளது.

மேலும் இந்த தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவும் இணைந்துள்ளது ஒரு வகையில் பயணர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போது என்னவெல்லாம் நடக்குமோ என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் உங்கள் செல்போனில் உள்ள இமெயில் மற்றும் கடவுச் சொல்லை வைத்து வேறொருவர் வெளியிலிருந்தே அனைத்துவிதமான மொபைல் செயலிகளை நிறுவலாம்.

இது எப்படி சாத்தியமாகும் எவ்வாறு நிறுவ முடியும். அதேபோல் இந்த வழிமுறையால் நாம் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவோம் என்பது குறித்தும் விரிவாக தெரிந்துகொள்வோம்.

உங்கள் செல்போனில் லாக்இன் செய்யப்பட்டிருக்கும் உங்களது இமெயில் மற்றும் கடவுச் சொல்லை வைத்து வெளியிலிருந்தே, அதாவது உலகின் எங்கிருந்தும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் மூலம் செல்போன்களில் செயலியை நிறுவ முடியும்.

உதாரணமாக ஒருவரின் நண்பர்களுக்கு தொழில்நுட்பம் தெரியவில்லை என்றாலும், மொபைல் செயலியை எவ்வாறு நிறுவது குறித்து கற்றுக்கொடுக்க முடியும். ஆனால் வெளியூர்களில் உள்ள நண்களுக்கு கற்றுக்கொடுக்க முடியாது.

அவ்வாறு முடியாத சமயத்தில் அவர்களது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் மூலமாகவோ செயலிகளை செல்போன்களில் நிறுவ முடியும்.

எப்படியென்றால், முதலில் கம்ப்யூட்டரில் உள்ள குரோம், எட்ஜ் போன்ற பிரவுசர்களை ஓபன் செய்ய வேண்டும்.

பின்னர் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று, எந்த செயலியை நிறுவ வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள் வேண்டும்.

இதனையடுத்து ‘Install’ என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய இமெயில் முகவரி மற்றும் கடவுச் சொல்லை கேட்கும். அப்போது ஏற்கெனவே உங்கள் நண்பரின் செல்போனில் உள்ள இமெயில் முகவரி மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்தால் அதில் செல்போனின் மாடலை தெரிவிக்கும். அதனை உறுதி செய்தவுடன் உங்களின் நண்பரின் செல்போனில் தானாகவே ‘Install’ செய்யப்படுவதை கண்கூடாக பார்க்கலாம்.

ஆனால் இந்த ஆன்லைன் வழிமுறை பல்வேறு விளைகளை ஏற்படுத்தும். நெருக்கமாக உள்ள இருவருக்கிடையே அவர்களின் போன் பரிமாற்றம் செய்யும்போதும், அவர்களுக்குள் இமெயில் மற்றும் கடவுச்சொல்லை கூற நேரிடும். அவ்வாறு கூறும்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும்போது, தேவையில்லாத செயலிகளை நிறுவி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்புண்டு. இதுமட்டுமல்லாமல் இமெயில் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி வேறொருவரின் வங்கி ஏடிஎம் கடவுச்சொல் மற்றும் ஆன்லைன் பணப் பரிமாற்ற கடவுச் சொல்லையும் தெரிந்துகொள்ள வாய்ப்புண்டு.

எனவே தொழில்நுட்ப உலகில் நாம் இமெயில் கடவுச்சொல்லை யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியம் காப்பதே நன்று.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!