ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் புரட்சி ,மற்ற நிறுவனங்களுக்கு சவால் குடுக்கும் ஹோண்டா
ஹோண்டா (Honda) நிறுவனம்
Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2024/honda-planning-to-bring-three-electrified-vehicles-by-2026-27-in-india-051675.htmlஹோண்டா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் புரட்சி ,மற்ற நிறுவனங்களுக்கு சவால் குடுக்கும் ஹோண்டா
ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் திட்டங்கள்
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வளர்ச்சி
ஏற்கனவே மின்சார கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஸை பின்னுக்கு தள்ளத் தொடங்கி இருக்கின்றது எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம். 2019 ஆம் ஆண்டிலேயே இந்த நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தது. 6க்கும் குறைவான ஆண்டுகளே ஆகின்ற நிலையில், இந்தியர்களின் மனம் கவர்ந்த மின்சார கார் (Electric Car) தயாரிப்பு நிறுவனமாக அது மாறி இருக்கின்றது.
மின்சார கார்களின் சிறப்பு வரவேற்பு
எம்ஜி நிறுவனம் ஐசிஇ (ICE) வாகனங்களையும் விற்பனைக்கு வழங்கி வந்தாலும் அதற்கு கிடைப்பதைக் காட்டிலும் மிக சிறப்பான வரவேற்பு அதன் எலெக்ட்ரிக் கார்களுக்கே கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. சொல்லப்போனால் கடந்த இரண்டு மாதங்களாக இந்த நிறுவனத்தை விற்பனையில் இ-கார்களே தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
டாடாவின் நெக்ஸான் EV-ஐ பின்னுக்கு தள்ளும் MG
மேலும், மின்சார கார்கள் விற்பனையில் டாடா-வையும் அது பின்னுக்கு தள்ளியிருக்கின்றது. சென்ற நவம்பர் மாதத்துடன் சேர்த்து அது இரண்டாவது முறையாக பேட்டரி கார் விற்பனையில் பின்னுக்கு தள்ளியுள்ளது. நாட்டின் நம்பர் 1 செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி (Nexon EV) இருந்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன் இடத்தை தற்போது எம்ஜி விண்ட்ஸர் இவி ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டிருக்கின்றது.
ஹோண்டாவின் மின்சார கார் திட்டங்கள்
இந்த மாதிரியான சூழலிலேயே டாடா மோட்டார்ஸுக்கு கூடுதல் தலை வலி தரும் விதமாக விரைவில் மற்றுமொரு நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அது வேறு யாருமில்லைங்க, ஹோண்டா (Honda) நிறுவனம்தான்.
ஹோண்டாவின் அமேஸ் கார் அறிமுகம்
இந்த நிறுவனம் சமீபத்திலேயே அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமுறை அமேஸ் (New Gen Amaze) கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வின்போதே தனியார் ஊடகம் ஒன்றிற்கு பதிலளித்த, ஹோண்டா நிறுவனத்தின் சிஇஓ, இந்தியாவில் அடுத்தடுத்து என இன்னும் சில புதுமுக கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை உறுதிப்படுத்தினார். அதில் ஒன்று மின்சார கார் என்பது அவருடைய பதிலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
எலிவேட் எலெக்ட்ரிக் வெர்ஷன் - 2026 அறிமுகம்
அந்த எலெக்ட்ரிக் கார், நிறுவனம் ஏற்கனவே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் எலிவேட் (Elevate) கார் மாடலை தழுவியதாக இருக்கும் என்றும், மேலும், அதன் வருகை 2026 ஆம் ஆண்டில் அரங்கேறக் கூடும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். ஆகையால், எம்ஜி மோட்டார் உடன் சேர்ந்து ஹோண்டா-வும் அதன் தரப்பில் டாடா மோட்டார்ஸுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோண்டாவின் எதிர்கால திட்டங்கள்
எலிவேட் இவி உடன் சேர்த்து மேலும் சில மின்சார கார்களையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதில் ஹைபிரிட் வகை கார்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் மின்சாரம் இந்த இரண்டிற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
2026-2027க்குள் அறிமுகம்
தன்னுடைய இந்த புதுமுக வாகனங்களை 2026-2027க்குள் விற்பனைக்குக் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டு இருக்கின்றது. இந்திய சந்தையில் தான் செய்து வரும் ஆதிக்கத்தை மேலும் வலுவானதாக மாற்றும் பொருட்டே இந்த பணியில் ஹோண்டா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.
எதிர்கால போட்டிகள்
நிறுவனம் எலிவேட் அடிப்படையிலான மின்சார காரை விற்பனைக்குக் கொண்டு வரும் எனில் அது விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி இ-விட்டாரா ஆகியவற்றிற்கு மிக சிறந்த போட்டியாக அமையும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.
மின்சார கார்களுக்கான வரவேற்பும் ஹோண்டாவின் எதிர்பார்ப்புகளும்
இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலிலேயே தன்னுடைய அதிகம் விற்பனையாகும் எலிவேட் எஸ்யூவி கார் மாடலின் மின்சார அவதாரத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் பிளானில் இருக்கின்றது, ஹோண்டா நிறுவனம். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu