புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது ஹீரோ கம்பெனி,எலக்ட்ரிக் வண்டி தயரிப்பு நிறுவங்களுடன் போட்டி அதிகரிக்கிறது

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது ஹீரோ கம்பெனி,எலக்ட்ரிக் வண்டி தயரிப்பு நிறுவங்களுடன் போட்டி அதிகரிக்கிறது
X
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப வாகனங்களை அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் துவங்கிவிட்டது.

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது ஹீரோ கம்பெனி,எலக்ட்ரிக் வண்டி தயரிப்பு நிறுவங்களுடன் போட்டி அதிகரிக்கிறது

ஹீரோ விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
ஹீரோ விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பலத்த யோசனைகளுக்கு பிறகு கடந்த வருடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நுழைந்தது. இதற்காகவே விடா என்கிற பிராண்டை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஹீரோ விடா பிராண்டில் இருந்து 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா வி2 என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

வரவேற்பு அதிகரிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப வாகனங்களை அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் துவங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று வேரியண்ட்களில் விடா வி2

லைட், பிளஸ் மற்றும் புரோ என 3 விதமான வேரியண்ட்களில் விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மூலமாக 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் ஹீரோ நுழைந்துள்ளது.

வேரியண்ட் விலை (எக்ஸ்-ஷோரூம்)
விடா வி2 லைட் ரூ.96,000
விடா வி2 பிளஸ் ரூ.1,19,000
விடா வி2 புரோ ரூ.1,39,000

பேட்டரி மற்றும் சார்ஜ் தொடர்பான விவரங்கள்

விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் லைட், பிளஸ் மற்றும் புரோ வேரியண்ட்களுக்கு இடையேயான வித்தியாசம் என்னவென்றால், அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகள் ஆகும். வி2 லைட் வேரியண்ட்டில் 2.2kWh பேட்டரியையும், வி2 பிளஸ் வேரியண்ட்டில் 3.44kWh பேட்டரியையும், வி2 புரோ வேரியண்ட்டில் 3.94kWh பேட்டரியையும் ஹீரோ வழங்கியுள்ளது.

இந்த பேட்டரிகளை வீட்டிலேயே சார்ஜ் நிரப்பிக் கொள்ளலாம் என தெரிவிக்கும் ஹீரோ நிறுவனம், 80% சார்ஜ் நிரப்ப 6 மணிநேரம் தேவைப்படும் என தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் மோட்டார் திறன்

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக 25 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வி2 புரோ வேரியண்ட்டில் பெறலாம். விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டான புரோவில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடலாம்.

டாப் ஸ்பீடு மற்றும் ரைடிங் மோட்கள்

வி2 புரோ ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 90kmph ஆகும். ஈக்கோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என 4 விதமான ரைடிங் மோட்களை வி2 புரோ ஸ்கூட்டரில் பெறலாம்.

விடா வி2 இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்

தொழில்நுட்ப அம்சங்கள்

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்களிலும் 7-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் உடன் பெறலாம். மேலும், இந்த 7-இன்ச் திரை ஆனது வாகனத்தை பற்றிய விபரங்கள் மற்றும் பேட்டரியின் நிலைமையையும் காட்டும்.

இந்த புதிய ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல், சாவியில்லா ஸ்டார்ட் மற்றும் அட்வான்ஸ்டு ரெகன் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

உத்தரவாதம் தொடர்பான விவரங்கள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 5-வருட/ 50,000கிமீ உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 3 வருட/ 30,000கிமீ உத்தரவாதம் வழங்கப்பட்டு உள்ளது.

போட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

புதிய ஹீரோ விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விற்பனையில் ஏத்தர் ரிஸ்டா, 450எக்ஸ், ஓலா எஸ்1, பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் போட்டியாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆதிக்கத்தை முறியடிக்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் மட்டுமே முடியும். அதனை புதிய விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெற்றிக்கரமாக செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 1 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது, ஹீரோ விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும்.


Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்