வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் ‛ஜி.எஸ்.எல்.வி-எப் 12'

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் ‛ஜி.எஸ்.எல்.வி-எப் 12
X
'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் மூலம் 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது

'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி' செயற்கைக்கோளுக்கு மாற்றாக 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் மூலம் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.

இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai solutions for small business