தொலைபேசியைக் கண்டறிந்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட வழிவகுத்த கிரஹாம் பெல்
அலெக்சாண்டர்கிரஹாம் பெல்
தொலைபேசியைக் கண்டறிந்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட வழிவகுத்த கிரஹாம் பெல் காலமான தினமின்று 1922 - ஆகஸ்ட் 2☎️
போட்டோபோன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இண்டக் ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரெக்கார்டிங், சிலிண்டர் உள்ளிட்ட, 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்.கடந்த, 1847 மார்ச் 3ம் தேதி, ஸ்காட்லாந்தில், எடின்பர்கில் பிறந்தார். பள்ளி செல்ல நாட்டமில்லாமல், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டார். பல்வேறு தோல்விகளுக்கு பின், 1876ல், தொலைபேசியைக் கண்டுபிடித்தார். அவர், தன் உதவியாளரிடம், 'வாட்சன் இங்கே வாருங்கள்; உங்களைக் காண வேண்டும்' என்பது தான், தொலைபேசி வழியாக வந்த முதல் குரல்!
இவரது தாயும், மனைவியும் காது கேளாதோர்; அவர்களின் துயரத்தை உணர்ந்ததால், உலகம் முழுவதும் உள்ள காது கேளாதோர் பள்ளிகளுக்கு பெருமளவில் நிதியுதவி வழங்கியதுடன், அவர்கள் துயரைக் களைவதற்கான பல அமைப்புகளையும் தொடங்கினார். வோல்டா பரிசு, ஆல்பர்ட் பதக்கம், எடிசன் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார்.
மனிதகுல வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களுள் ஒருவர் என்ற பெருமைக்குரிய அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், 1922-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே நாளில் 75-ம் வயதில் மறைந்தார்.
அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tags
- #GrahamBell
- #inventedtelephone
- #telecommunicationsrevolution
- #MemorialDay
- #patentholder60inventions
- #audiometers
- #metaldetectors
- #inductionbalances
- #voicerecordings
- #cylinders
- #போட்டோபோன்
- #ஆடியோமீட்டர்
- #மெட்டல்டிடக்டர்
- #இண்டக்ஷன்பேலன்ஸ்
- #வாய்ஸ்ரெக்கார்டிங்
- #சிலிண்டர்
- #60கண்டுபிடிப்புகள்
- #காப்புரிமை
- #அலெக்சாண்டர்கிரஹாம் பெல்
- #நினைவுதினம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu