கூகுள் மொழிபெயர்ப்புச் சேவையில் சமஸ்கிருதம் சேர்ப்பு: சுந்தர்பிச்சை
இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால், நமது அனைத்து செயல்பாடுகளையும் மிக எளிதாக்கிவிட்டது, கூகுள் நிறுவனம். நாம், ஒருநாளில் ஒருமுறையாவது கூகுளில் போய் எதையாவது தேடாமல் இருக்க முடிவதில்லை.
கூகுள் வழங்கும் பல சேவைகளில், மிக பயனுள்ளதாகவும், அவசியமானதாகவும் கூகுள் மொழிபெயர்ப்புக்கு உதவக்கூடியது, 'டிரான்ஸ்லேட்' ஆகும். இதில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு, மலையாளம், உள்ளிட்ட பல மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சில நேரங்களில் கூகுள் மொழிபெயர்ப்பு கிண்டலுக்கு ஆளாகிறது. எனினும், பயனர்கள் தங்களுக்கு தேவையான மொழிகளில் உள்ளவற்றை, கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் மொழி மாற்றம் செய்து, எளிதாக அறிந்துக் கொள்ள, இது பேருதவியாக இருக்கிறது.
தற்போது கூகுள் நிறுவனம், மேலும் 24 மொழிகளையும் இணைத்துள்ளதாக, அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதில், பழமையான சமஸ்கிருத மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பம்பரா, டோக்ரி, போஜ்புரி உள்பட மேலும் 7 இந்திய மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து, உலகம் முழுதும் உள்ள 133 மொழிகளும், இந்திய மொழிகளில் 19 மொழிகளும் கூகுள் மொழிமாற்ற சேவையில் பயனர்களுக்கு அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu