ப்ளிப்கார்ட்டில் புதிய அதிரடி தள்ளுபடி விற்பனை அறிமுகம் ,ஸ்மார்ட்போன்கள் கெஜட்ஸ்கள் கம்மி விலையில்
பிளிப்கார்ட் எண்ட் ஆஃப் சீசன் விற்பனையில் கூகுள் பிக்சல் 8ஏ, ஐபோன் 15 தள்ளுபடி விவரங்கள்
கூகுள் பிக்சல் 8ஏ மற்றும் ஐபோன் 15 போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலை சற்று அதிகமாக இருக்கும். ஆனையால், இப்படிப்பட்ட போன்களை அனைவராலும் வாங்க முடிவதில்லை. இத்தகைய ஃபோன்களை வாங்க, மக்கள் பொதுவாக விற்பனை அல்லது சலுகைக்காக காத்திருக்கிறார்கள். இவற்றில் அந்த ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கின்றது.
Google Pixel 8a, iPhone 15 வாங்க நல்ல வாய்ப்பு
நீங்களும் Google Pixel 8a அல்லது iPhone 15 வாங்க இதுபோன்ற விற்பனைகளுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பிளிப்கார்ட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் விற்பனை தொடங்கியுள்ளது. இன்று முதல் அதாவது டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடக்கும் இந்த விற்பனையில் பல பிரீமியம் போன்களின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன. இந்த சேலில் வாடிக்கையாளர்கள் அவற்றை மலிவான விலையில் வாங்கலாம்.
பழைய போனை கொடுத்து புதிய போன் வாங்க எக்ஸ்சேஞ்ச் சலுகை
பிளிப்கார்ட்டில் நடைபெற்று வரும் என்ட் ஆஃப் சீசன் விற்பனையில் கூகுள் பிக்சல் 8ஏ மற்றும் ஐபோன் 15 போன்ற போன்களை அதிக தள்ளுபடியுடன் குறைந்த விலையில் விலையில் வாங்கலாம். மேலும், உங்கள் பழைய போனை கொடுத்து புதிய ஃபோனை வாங்க விரும்பினால், இந்த சேலில் நல்ல பரிமாற்ற சலுகையும், அதாவது, எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இருப்பினும், பரிமாற்ற சலுகைக்காக கொடுக்கப்படும் தொலைபேசியின் நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்து விலை குறைப்பு இருக்கும்.
Google Pixel 8a தள்ளுபடிகள்
கூகுளின் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் வருகிறது. பலருக்கு பிடித்த போனாக இருக்கும் இதை வாங்க எப்போதும் பயனர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த போனின் விலை ரூ.52,999. ஆனால் ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) எந்த வங்கி சலுகையும் இல்லாமலேயே 30% தள்ளுபடிக்கு பிறகு ரூ.36,999க்கு கிடைக்கிறது. இதன் மூலம் போனில் ரூ.16,000 சேமிக்கப்படுகிறது.
ஆனால், இந்த போனில் கிடைக்கும் தள்ளுபடிகள் இத்துடன் முடிவடையவில்லை. இந்த போனை வாங்க ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். இந்த போனில் ரூ.36,300 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது.
தள்ளுபடி வகை | விவரம் |
---|---|
அசல் விலை | ரூ.52,999 |
பிளிப்கார்ட்டில் 30% தள்ளுபடி | ரூ.36,999 |
ICICI வங்கி கிரெடிட் கார்டு தள்ளுபடி | ரூ.2,000 |
Flipkart Axis கிரெடிட் கார்டு கேஷ்பேக் | 5% |
எக்ஸ்சேஞ்ச் சலுகை | ரூ.36,300 வரை |
iPhone 15 தள்ளுபடிகள்
Apple iPhone 15 (Black, 128 GB) போன் வாங்க விரும்பும் நபர்களுக்கு இந்த பிளிப்கார்ட் விற்பனை நல்ல வாய்ப்பு. இந்த போனின் அசல் விலை ரூ.69,900. ஆனால் இந்த போன் Flipkart விற்பனையில் 16% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் மூலம் போனின் விலை ரூ.11,401 குறைந்து ரூ.58,499 ஆக உள்ளது. UPI மூலம் பணம் செலுத்தினால், 1,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். மேலும், Flipkart Axis Bank Credit Card மூலம் பணம் செலுத்தினால், 5% கேஷ்பேக் கிடைக்கும். இது தவிர, இந்த போனில் ரூ.55,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது.
தள்ளுபடி வகை | விவரம் |
---|---|
அசல் விலை | ரூ.69,900 |
பிளிப்கார்ட்டில் 16% தள்ளுபடி | ரூ.58,499 |
UPI மூலம் பணம் செலுத்தினால் தள்ளுபடி | ரூ.1,000 |
Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டு கேஷ்பேக் | 5% |
எக்ஸ்சேஞ்ச் சலுகை | ரூ.55,000 வரை |
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu