கம்ப்யூட்டர், மொபைல் போன் பயன்படுத்துவோர் உஷார்.. எச்சரிக்கை

கம்ப்யூட்டர், மொபைல் போன் பயன்படுத்துவோர் உஷார்.. எச்சரிக்கை
X
கணினி மற்றும் மொபைல் போன் உபயோகிப்போர் செயலிகள் மற்றும் மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவைகளை காவல் துறை எச்சரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

கணினி தொழில்நுட்ப உலகில் தற்போது ஏராளமான Operating System, Application Software, Anti-Virus உள்ளிட்ட ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் உலா வருகின்றன. மேலும் மொபைல் போனிலும் லட்சக்கணக்கில் செயலிகள் (Mobile Apps) அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மென்பொருட்கள் மற்றும் செயலிகளில் மக்களுக்கு பாதுகாப்பானதாக ஒரு சிலவற்றை மட்டுமே கூற முடியும். ஏனென்றால் கணினி மற்றும் மொபைல் தொழில்நுட்பங்களை மக்கள் அதிகம் அறிந்தவர்கள் அல்ல. இதனால் ஏதோ ஒரு செயலி அவர்களை கவர்ந்தால் அதில் தங்களின் தகவல்களை கொடுத்துவிடுகின்றனர்.

உதாரணமாக சில நிமிடங்களில் லோன் கிடைத்துவிடும் எனக்கூறி கூகுள் பிளே ஸ்டோரில் ஏராளமான செயலிகள் உலாவருகின்றன. இந்த செயலிகளில் மக்களை கவர இன்ஸ்டன்ட் லோன், ஆவணங்கள் இல்லாமல் கடன் உள்ளிட்டவை எனக்கூறி அதனை பதிவிறக்கம் செய்ய தூண்டிவிடுகின்றனர்.

பதிவிறக்கம் செய்த அவர்கள் கடன் பெற்றுவிடுவோம் என்ற ஆசையில் அதில் தங்களின் விபரங்களை கொடுத்து விடுகின்றனர். இதில் அவர்களுக்கு ஆபத்து நேரிடுகிறது. இவ்வாறு கொடுக்கப்படும் தகவல்களை சுலபமாக சேகரித்து பெரிய நிறுவனங்களுக்கு அதனை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து விடுகின்றனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் மக்கள் அதை புரிந்துகொள்ளாமல் ஆன்லைன் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பான கணினி பயன்பாட்டிற்கான குறிப்புகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி..

  • Operating System, Application Software, Anti-Virus தொடர்ந்து புதுப்பிக்கவும்.
  • முக்கியமான கோப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் காப்புப் பிரதி(Backup) எடுக்கவும்.
  • யாரும் பயன்படுத்தாத நிலையில் கணினியை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்.
  • பயன்படாத கோப்புகள் அல்லது தரவுகளை அகற்றவும்.
  • இணையத்திலிருந்து அறிமுகம் அல்லாத மென்பொருட்கள் மற்றும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் .

இவ்வாறு காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!