எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? – பிளிப்கார்ட்டிலேயே இனி வாங்கலாம்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? – பிளிப்கார்ட்டிலேயே இனி வாங்கலாம்!
X

Electric scooter sale in flipkart - எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? – பிளிப்கார்ட்டிலேயே இனி வாங்கலாம்!

Electric scooter sale in flipkart -ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, ஷோரூம் விலைக்கே பெற்றுக் கொள்ளலாம்

Electric scooter sale in flipkart - ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள் என ஆன்லைனில் ஆர்டர் செய்து பழக்கப்பட்ட நமக்கு, இனி பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் மூலம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி செய்ய முன்னணி நிறுவனம் முன்வந்து உள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக, மக்களின் பார்வை தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பி உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் இந்த அவசர தேவையை கருத்தில் கொண்டு பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புத் துறைகளில் புதிய நிறுவனங்களும் களமிறங்கி வருகின்றன.

Electric scooter sale in flipkart -பொதுவாக, நாம் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை, ஷோரூம்கள் சென்றுதான் வாங்கி வந்தோம். தற்போது ஆன்லைனிலேயே, நாம் இரு சக்கர வாகனங்களை ஆர்டர் செய்து பெறும் நிலை வந்துவிட்டது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள Bounce Infinity நிறுவனம், தங்களது முதல் தயாரிப்பான E1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பிளிப்கார்ட்டில் விற்பனை செய்ய முன்வந்து உள்ளது. முன்னணி நகரங்களான டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முதற்கட்டமாக டெலிவரி மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

Electric scooter sale in flipkart -ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டாலும், இ-பைக்கை ஷோரூம் விலைக்கே பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிளிப்கார்ட்டில் விற்பனை செய்வதால், எல்லா தரப்பு மக்களிடையேயும், தங்கள் நிறுவன தயாரிப்புகள் எளிதாக சென்றடையும் என்ற நம்பிக்கை தங்களுக்கு ஏற்பட்டு உள்ளதாக, அந்நிறுவன உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்