ஆதார்கார்டு மாதிரி இன்னொரு அடையாள அட்டை,மாணவர்களுக்கு தனி அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

ஆதார்கார்டு மாதிரி இன்னொரு அடையாள அட்டை,மாணவர்களுக்கு தனி அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
X
அபார் (APAAR) என்று அழைக்கப்படும் ஆட்டோமேட்டெட் பெர்மனன்ட் அகாடாமிக் அக்கவுண்ட் ரிஜிஸ்டரி (Automated Permanent Academic Account Registry) கார்டு அடையாள சான்று மட்டுமில்லை, கல்விக்கான முக்கிய ஆவணமாக இருக்கிறது.

ஆதார்கார்டு மாதிரி இன்னொரு அடையாள அட்டை,மாணவர்களுக்கு தனி அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

அபார் கார்டு (APAAR Card) - மாணவர்களுக்கான புதிய அடையாள அட்டை

அபார் கார்டு (APAAR Card) - மாணவர்களுக்கான புதிய அடையாள அட்டை

அபார் கார்டு என்றால் என்ன?

ஆதார் கார்டை பிறந்த குழந்தை முதல் வாங்கி கொள்ளலாம். அது முக்கியமான அடையாள சான்றாக இருக்கிறது. ஆனால், இந்த அபார் (APAAR) என்று அழைக்கப்படும் ஆட்டோமேட்டெட் பெர்மனன்ட் அகாடாமிக் அக்கவுண்ட் ரிஜிஸ்டரி (Automated Permanent Academic Account Registry) கார்டு அடையாள சான்று மட்டுமில்லை, கல்விக்கான முக்கிய ஆவணமாக இருக்கிறது.

அபார் கார்டு

யார் யார் இந்த அபார் கார்டை பெறலாம்?

மேல் நிலை பள்ளிகளில் தொடங்கி கல்லூரிகள் அல்லது அதற்கு மேலான கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த அபார் கார்டு வழங்க திட்டமிட்டப்பட்டு இருக்கிறது. இப்போது, மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பணிகள் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறது.

அபார் கார்டின் சிறப்பம்சங்கள்

  • ஆதார் கார்டு போலவே 12 நம்பர்களை கொண்ட கார்டாக இந்த அபார் வழங்கப்படுகிறது.
  • ஒரே நாடு ஒரே மாணவர் ஐடி என்னும் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதார் கார்டு போலவே இந்தியாவில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கார்டு ஒரே சேவையை வழங்க இருக்கிறது.
  • மாணவர்களின் விவரங்கள் இந்த அபார் கார்டு மூலம் நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளப்படுகிறது. இதில் டாக்குமென்ட்களும் அடங்கும்.
  • டிஜிட்டலாக மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், எந்த வித சிக்கலும் இல்லாமல் அதை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.
  • இதுவொரு வாழ்நாள் அடையாள அட்டையாக இருப்பதால், மாணவர்கள் ஆரம்ப கல்வியை தொடங்குவது முதல் உயர் படிப்பு வரையில் இந்த ஒரே கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

அபார் கார்டில் பதிவு செய்யப்படும் விவரங்கள்

விவரம் பதிவு
கல்வி கடன்கள்
கல்வி சான்றிதழ்கள்
ஏபிசி (ABC) சேவைகள்
டிஜிலாக்கர் (Digilocker) சேவைகள்

அபார் கார்டின் நன்மைகள்

  • கல்வி கடனை பெறுவதற்கான ஆவணங்களை கொடுக்கும்போது ஏற்படும் சிக்கல்களை இந்த அபார் கார்டு தவிர்த்துவிடும்.
  • ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது, இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • பிசிகல் சான்றிதழ்களை எடுத்து செல்வதையும், இது குறைக்க இருக்கிறது.

அபார் கார்டு பெற பெற்றோர்கள் ஒப்புதல் அவசியம்

ஆதார் கார்டு மூலமாக வெரிபிகேஷன் செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதால், இதில் எந்தவித சிக்கலும் இருக்காது. அதேபோல பள்ளி மாணவர்களுக்கு அபார் கார்டு வழங்க பெற்றோர்களின் ஒப்புதல்கள் மாநில அரசாங்கத்தால் கேட்கப்படுகிறது.

அபார் கார்டிற்கு தேவையான தகவல்கள்

மாணவர்கள் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம் மற்றும் போட்டோ அடிப்படை விவரங்களை கொண்டு இந்த அபார் கார்டு சேவை தொடங்கப்படுகிறது. ஆதார் அடிப்படையில் வெரிபிகேஷன் செய்யப்படும். சிறார்களாக மாணவர்கள் இருந்தால், பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும்.

எதிர்காலத்தில் அபார் கார்டு

இது வரும் நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த 12 நம்பர்களை வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாறுவது, ஆவணங்களை சமர்பிப்பது போன்றவற்றை செய்து கொள்ள முடிவதால், மாணவர்களும் இதற்கு மாறலாம்.

முடிவுரை

அபார் கார்டு என்பது மாணவர்களுக்கான ஒரு வாழ்நாள் அடையாள அட்டையாகும். இது மாணவர்களின் கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் கல்வி கடன் பெறுதல், சான்றிதழ்களை சமர்ப்பித்தல் போன்ற பணிகள் மிகவும் எளிதாகிறது. எதிர்காலத்தில் இந்த அபார் கார்டு அனைத்து மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.


Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்