மதுரை வடக்கு பா.ஜ.க. வேட்பாளர் வீதி,வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை வடக்கு பா.ஜ.க. வேட்பாளர்   வீதி,வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு
X
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் மத்திய, மாநில அரசின் நல திட்டங்களை கூறி வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார்.

ஏப்ரல் 6ம் தேதி அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தமிழகம் முழுவதும் சூடுபிடித்து வருகிறது.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணன் மதுரை வடக்கு பகுதி புதூர் மற்றும் செல்லூர் கோமதிபுரம் ஆகிய பகுதிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்ட திட்டங்களை எடுத்துக்கூறி வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!