ரசிகர்களின் முகத்தை பச்சை குத்திய டிடிஎஃப் வாசன், புகழ்ந்து தள்ளிய ஜிபி முத்து
ரசிகர்கள் ,முகங்களை முதுகில் பச்சை குத்திக் கொண்ட யூடியூபர் டிடிஎப் வாசன்
யூடியூப் தளத்தில் தம்முடைய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன்
இவர் தனது யூடியூப் பக்கத்தில் விலையுயர்ந்த பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர். சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின. சினிமா நடிகர், நடிகைகளை போல் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் எங்கு சென்றாலும் அங்கு போக்குவரத்தே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஏராளமானோர் இவரை காண ஆவலாக வருவதுண்டு.
டிடிஎஃப் வாசனை லட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்கிறார்கள் அண்மைக்காலமாக டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிடிஎஃப் வாசன், சில வழக்குகளில் சிக்கி இருந்தார். நெடுஞ்சாலைகளில் கூட பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசங்களை நிகழ்த்துவது உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.
அண்மையில் ஒரு நெடுஞ்சாலையில் 247 கி.மீ. வேகத்தில் இவர் சென்ற வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது வாகனத்தில் அமர்த்தி கொண்டு பிஸியான சாலையில் 140 க்கும் மேற்பட்ட கி.மீ. வேகத்தில் வாசன் சென்றதும், காற்றின் வேகத்தால் ஜி.பி.முத்துவின் வாய் பேசும் போது கோணலாக சென்றதும் வீடியோவில் பதிவானது.
இத்தனை வேகத்திலும் ஜிபி முத்துவின் தலையில் ஹெல்மெட்டே இல்லை. கேட்டால், ஜிபி முத்துவின் முக பாவனைகளை ரசிப்பதற்காகவே அவருக்கு ஹெல்மெட் அணிவிக்கவில்லை என வாசன் தெரிவித்திருந்தார். இதனால் வாசன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.
இவரைப் போல டிக்டாக் மற்றும் யூடியூப் தளங்கள் மூலம் பிரபலமானவர் தான் ஜி.பி முத்து சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும், அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதும் முக்கியமாகும்.
இந்நிலையில் வாசன், தனது முதுகில் ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் போது அந்த இடத்திற்கு ஜி.பி. முத்து வருகை தந்துள்ளார். மேலும் வாசனை புகழ்ந்து பேசியுள்ளார். "நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட. டிடிஎஃப் வாசன் தனது ரசிகர்களுக்காக 40 பேர் முகத்தை பச்சை குத்துறார். உன் ரசிகர்கள் மேலே உள்ள பாசத்தை பாராட்டுறேன் தம்பி" என பேசியுள்ளார்.
இந்த பச்சை குத்துவது 15 மணி நேரமாக நடக்கிறது என வாசன் கூற, சாப்பிடீங்களா தம்பி என பாசத்துடன் கேட்கிறார் ஜிபி முத்து. பின்னர் தெரியுற மாதிரி இடத்துல பச்சை குத்துனா, பட வாய்ப்பு கிடைக்காது, அதுனால தெரியாத மாதிரி இடத்துல குத்துங்கன்னு சொன்னேன். தம்பி முதுகுல பச்சை குத்திக்கிட்டார் என கூறியுள்ளார்
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ட்ரென்ட் ஆகியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu