தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ள உலக செவிலியர் தின வாழ்த்து.

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ள உலக செவிலியர் தின வாழ்த்து.
X

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ள உலக செவிலியர் தின வாழ்த்துச்செய்தி தான் இது..

உயிர்காக்கும் மருத்துவ பணியில் முக்கிய கடைமையாற்றும் செவிலியர்களின் சேவையை நினைவுகூறும் செவிலியர் தினத்தில் அவர்தம் அரும்பெரும் சேவைகளை பாராட்டி போற்றி வாழ்த்துவோமாக ...

குறிப்பாக கொரோனா தடுப்பு பணியில் வெள்ளுடை போர் வீரர்களாக மருத்துவமனைகளில் வலம் வந்து மக்களுக்கு பலம் சேர்க்கின்றார்கள். அவர்களை இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டுவோம்..

மேலும் அவர்கள் மற்றவர்கள் உடல் நலத்தை பேணி பாதுகாப்பது போன்று தங்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து செவிலியர்களுக்கும் உலக செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்