Women Police Special Medal- பெண் காவலர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு முடிவு

Women Police Special Medal- பெண் காவலர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு முடிவு
X

Women Police Special Medal- பெண் போலீசாருக்கு சிறப்பு பதக்கம் தர தமிழக அரசு முடிவு (கோப்பு படம்)

Women Police Special Medal- பெண் காவலர்கள் இணைந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Women Police, Special Medal, Tamil Nadu Govt- தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் 1973 ஆம் ஆண்டு பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் அப்போது 1 காவல் உதவி ஆய்வாளர், 1 தலைமை காவலர், 20 காவலர்கள் என 22 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். தற்போது, 35,329 பெண் காவல் அதிகாரிகள், காவலர்கள் பணியில் உள்ளனர்.

நாட்டில் உள்ள காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை முக்கியமான ஒன்றாகவும், பல சிறப்புகளை கொண்டதாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, சைபர் குற்றப்பிரிவு, புலனாய்வு, போக்குவரத்து என பல்வேறு பிரிவுகள் உள்ளன. பெண் காவலர்கள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் உள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி கடந்த ஆண்டு ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு வழங்கப்படும் உயரிய கௌரவமான குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் பொன்விழா கொண்டாடப்பட்டது. இதற்கிடையே, பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் அனைவருக்கும் சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!