சசிகலாவை விரைவில் சந்திப்பேன்: ஓபிஎஸ்

சசிகலாவை விரைவில் சந்திப்பேன்: ஓபிஎஸ்
X

ஓபிஎஸ் (பைல் படம்)

சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே யாருக்கு அதிமுக சொந்தம் என்ற போர் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சட்ட ரீதியாக தங்களுக்கு தான் அதிமுக சொந்தம் என நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறியதாவது:

தமிழக பட்ஜெட் 20 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்கள் கருத்துக் கேட்டதற்கு, பட்ஜெட் நிதிநிலை அறிக்கை வெளிவந்தவுடன் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் என்று ஓபிஎஸ் கூறினார். மேலும் டிடிவி தினகரனுடன் சேர்ந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, வாய்ப்பு இருந்தால் இணைந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

சசிகலா சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை சட்ட விதிமுறைக்கு எதிராகவேதான் உள்ளது என்றும் கூறினார். மேலும் பொதுக்குழு குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கான கேள்விக்கு மக்கள் தீர்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!