கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் தள்ளிப்போவது ஏன்?

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் தள்ளிப்போவது ஏன்?
X

நடிகர் சிவ கார்த்திகேயன்.

kamal sivakarthikeyan movie- கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் தள்ளிப்போவது ஏன்? என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

kamal sivakarthikeyan movie- தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆண் ரசிகர்களை விட கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களே அதிக அளவில் இவரது ரசிகர்களாக உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்' டான்'. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், உருவாகியுள்ள படம் அயலான். இப்படம் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருந்த படம் பொங்கல் தினத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாததால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சிவகார்த்திகேயன் தற்போது, மாவீரன் படத்தில் பிஷியாக உள்ளதால் சிவகார்த்திகேயன்- கமல் இணையும் படம் தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் விக்ரம் படத்திற்குப் பின் கமல், இந்தியன் 2 படத்தில் பிசியாகி இருப்பதும் சிவகார்த்திகேயன் சூட்டிங் தள்ளிப்போவதற்கான காரணங்களாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!