ரஜினியின் புதிய படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலக காரணம் என்ன?

ரஜினியின் புதிய படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலக காரணம் என்ன?
X

nelson avoided sivakarthikeyan-ரஜினியின் ஜெயிலர் பட போஸ்டர்.

Rajinikanth New Film-ரஜினியின் புதிய படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலக காரணம் என்ன?

Rajinikanth New Film- அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான 'ஜெயிலர்' படத்தில் நடிக்க உள்ளார் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் ரஜினி முன்னணி ஜெயில் காவலராக நடிப்பதால் ஜெயிலர் என பெயர் சூட்டுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த உள்ளதால் இந்த படத்தில் இணைந்துள்ள பிரபலங்களின் லிஸ்ட் வெளி வரத்துவங்கியுள்ளது .தற்போழுது ஜெயிலர் படத்திற்கு சிகை அலங்காரம் செய்ய ஆர். ஆர். ஆர். போன்ற பிரபல படங்களுக்கு மேக் ஓவர் செய்த 'ஆலிம் ஹாக்கிங்' தான் இந்த படத்திற்கும் ரஜினியின் ஸ்டைலிசாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் படத்தில் மேலும் ஒரு இளம் நடிகை நடிக்க உள்ளதாகவும் 'ராக்கி', 'தரமணி' புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் 'ஜெயிலர்' படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


nelson avoided sivakarthikeyan-முதலில் இந்த கேரக்டரில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியிருந்தார், ஆனால் அவர் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருவதால், அவருக்கு பதில் வசந்த் ரவியை தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க 5 நாள் மட்டுமே கால் சீட் கொடுத்ததாகவும் அதற்கு அதிகம் சம்பளம் கேட்டுள்ளதாகவும் ,ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுக்க முடியாது என மறுத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுவே இந்த படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் வெளியேறியதற்கான காரணமாக கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!