யார் சொல்வது தான் உண்மை? கச்சத்தீவு பிரச்சினைக்கு முடிவு கட்டுவாரா மோடி?
கச்சத்தீவை காட்டும் வரைபடம்.
தமிழகத்தின் தேர்தல் களத்தில் கச்சத்தீவு பிரச்சனை புயலாக மையம் கொண்டுள்ளது. கச்சத்தீவு தேர்தலுக்கு தேர்தல் பேசப்படும் ஒரு பேசுபொருள் தான் என்றாலும் இம்முறை அது பேசப்படும் விதம் அதனால் ஏற்பட்டுள்ள உஷ்ணம் தேர்தல் முடிந்த பின்னரும் அடங்காது என்றே கருதப்படுகிறது. இவ்வளவு நாளும் கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தி அதற்கு உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி என்று தான் பொதுவாக குற்றம் சாட்டப்பட்டு வரும். ஆனால் அதற்கான ஆதாரங்களை யாரும் வெளியிட்டது இல்லை. இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆவணங்களை பெற்று எந்த தேதியில் எப்படி யாரால் தாரைவாக்கப்பட்டது அதற்கு தமிழகம் என்ன செய்தது என்பதை விலாவாரியாக பதிவு செய்திருக்கிறார்.
பிரதமர் மோடியும் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கச்சத்தீவு பிரச்சனையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என பதிவிட்டுள்ளார் கச்சத்தீவு தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இந்த பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அருணாசல பிரதேச மாநிலத்தில் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மறைப்பதற்காக கட்சத்தீவு பிரச்சனையை 70 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக இப்போது கிளப்பி இருக்கிறது என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதிமுக இந்த பிரச்சனையில் வாய் திறக்கவில்லை என்றாலும் இந்த தேர்தலில் கட்சத் தீவு முக்கிய பிரச்சினையாக கருதப்பட்டு வருகிறது. சாதாரண பொது மக்கள் மத்தியில் தற்போது எழும் கேள்வி என்னவென்றால் கச்சத்தீவு விவகாரத்தில் உண்மைதான் என்ன தமிழக மீனவர்கள் குறிப்பாக வேதாரண்யம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மீனவர்கள் தான் இலங்கை கடற்படை மற்றும் சிங்கள கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. அவர்களுைடய விலை உயர்ந்த படகுகளை கூட இலங்கை அரசு அபகரித்து சென்று விடுகிறது.
இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் அதற்கான உறுதியை நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதா அரசு வாக்குறுதியாக அளிக்க வேண்டும். எப்படி அயோத்தி ராமர் கோவில், பொது சிவில் சட்டம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து பற்றி அளித்த வாக்குறுதியை பாஜ அரசு நிறைவேற்றி இருக்கிறதோ அதேபோல கச்சத்தீவுக்கும் ஒரு நிரந்தர தீர்வுக்கான வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே சாமானிய தமிழக மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu