#உங்கள் பகுதியில் யார் வேட்பாளர்? முழு விபரம்
ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு வரும் 27 மற்றும் 30-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. திமுக, அதிமுக, பாஜக என பிரதான கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். தேர்தலில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது. அதன்படி, தேர்தல் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது
உங்கள் பகுதியில் யார் வேட்பாளர் என அறிய கீழே உள்ள இணையதள லிங்க்-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். அதில் உங்கள் மாவட்டத்தினை தேர்வு செய்யுங்கள், வார்டு வாரியாக, கட்சி வாரியாக லிங்கை கிளிக் செய்து வேட்பாளர்கள் விபரங்களை அறியலாம்.
இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்: Full candidate list
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu