/* */

நாங்களும் விலை ஏறுவோம்!: தக்காளியுடன் போட்டி போடும் பச்சை மிளகாய், இஞ்சி

தக்காளி கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120 முதல் ரூ.130 வரையும் இஞ்சி 1 கிலோ 220 வரையும் விற்பனை ஆகிறது

HIGHLIGHTS

நாங்களும் விலை ஏறுவோம்!: தக்காளியுடன் போட்டி போடும் பச்சை மிளகாய், இஞ்சி
X

கோப்புப்படம் 

கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது.

தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சீசன் முடிந்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஹாசனில் மட்டுமே தற்போது பச்சை மிளகாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து குறைந்து உள்ளது.

இதன்காரணமாக கடந்த சில நாட்களாக பச்சை மிளகாய் விலை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் தற்போது 3 மடங்கு வரை விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை ஆகிறது.

வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.150வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பச்சை மிளகாய் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 100டன் அளவுக்கு பச்சை மிளகாய் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அதன் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இன்று 80 டன் பச்சை மிளகாய் விற்பனைக்கு வந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பச்சை மிளகாய் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு பச்சை மிளகாய் விலை அதிகரித்து உள்ளது என்று கூறினார்.

இதேபோல் இஞ்சியின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று அதன் விலை மேலும் எகிறி உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.220-க்கும் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.250- வரையும் விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைவால் பச்சை பட்டாணி விலையும் அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.200-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.250 வரையும் விற்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தைக்கு ஊட்டி, கொடைக்கானல், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பச்சை பட்டாணி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது டெல்லியில் இருந்து குறைந்த அளவில் மட்டுமே பச்சை பட்டாணி விற்பனைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்து இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 July 2023 10:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!