Ramar pillai latest news: உயிருக்கு ஆபத்து எனக் கூறிய ராமர் பிள்ளை எங்கே?

Ramar pillai latest news: உயிருக்கு ஆபத்து எனக் கூறிய ராமர் பிள்ளை எங்கே?
X
Ramar pillai latest news: ராமர் பிள்ளை குறித்து இதுவரை செய்திகளோ அல்லது அவரது நேர்காணலோ வெளியாகவில்லை.

Ramar pillai latest news: தமிழகம் மட்டுமின்றி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் ராமர்பிள்ளை, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய பெயரை கேட்டாலே தெரியாதவர்கள் யாரும் இல்லை.

இவர் குறைந்த விலையில் மூலிகை பெட்ரோல் தயாரித்துள்ளதாகக் கூறி நாட்டையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஆவார்.

பெட்ரோல் விலை அசுர வேகத்தில் உயர்ந்தகொண்டிருந்த நேரத்தில் 15 ரூபாய்க்கு பெட்ரோல் கொடுப்பேன் என தெரிவித்தவர்.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம், நீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக கூறி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பாளரான ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 23 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் போலியானது என்று சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்றத்தில் தொடர் போராட்டத்திற்கு பிறகு வழக்கில் வெற்றி பெற்றுள்ளதாகவும் மூலிகை பெட்ரோல் உண்மை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பின்பும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான உபகரணங்களை என் கையில் கொடுக்காமல் நீதிமன்றம் சொன்ன பணத்தையும் என் கையில் கொடுக்காமல் சிபிஐ காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் முதல்வர், பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதுவே எனது கடைசி செய்தியாளர் சந்திப்பாக கூட இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், தமிழக முதல்வர் முன்னிலையில் மீண்டும் மூலிகை பெட்ரோல் செய்து காட்ட தயார் எனவும், மூலிகை பெட்ரோலை வெற்றிகரமாக பரிசோதனை செய்து காட்ட தவறினால் எனக்கு என்ன தண்டனை வேண்டும் என்னாறும் கொடுங்கள் என தெரிவித்திருந்தார். இந்த சோதனையை அனைத்து தொலைக்காட்சியிலும் நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

தனக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் நான் நிம்மதியாக இல்லையென கூறியவர், மூலிகை பெட்ரோல் தயாரிப்பு வழிமுறைகளைக் கேட்டு பல்வேறு தரப்பிலிருந்து என் உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் என் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், ராமர் பிள்ளை குறித்து இதுவரை செய்திகளோ அல்லது அவரது நேர்காணலோ இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story