தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்  அமைச்சர் செங்கோட்டையன் பதில்
X

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து தற்போது கூற இயலாது என திண்டுக்கல்லில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியின் போது கூறினார்.

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 376 பிரைமரி பள்ளி களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் பேசுகையில்,

கொரோனா தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆன்லைன் மூலம் சரிவர வகுப்புகள் நடத்தாமல் மாணவர்களிடம் முழு கட்டணத்தையும் பெற்றுக் கொண்டு கல்வி பாடங்களை தாங்களே படித்துக் கொள்ள வேண்டும் என கூறுவதாக எழுந்த புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்ட கேள்விக்கு இதுகுறித்து பெற்றோர்கள் கல்வித் துறைக்கு எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. இதில் 10 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அரசர் காலத்தில் இருந்ததைப் போல குடிமராமத்து இத்திட்டத்தை நிறைவேற்றியதன் அடிப்படையில் புயல் சேதங்கள் இல்லாமல் தண்ணீர் நிரம்பி உள்ளன. பொருளாதாரத்தில் ஒருவர் முன்னேற வேண்டும் என்று சொன்னால் கல்வி ஒன்றால் தான் முன்னேற முடியும். அமைதியான மாநிலம், சட்டம் ஒழுங்கை பேணி காக்கின்ற மாநிலம் மின்வெட்டே இல்லாத மாநிலம் அனைத்து கட்டமைப்பு உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.இந்த வருடம் முழு ஆண்டுத்தேர்வு நடத்துவது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து தேதி குறிப்பிட இயலாது.முதல்வர் கூட சொல்லியிருக்கிறார், பள்ளியை திறப்பதை காட்டிலும் மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!