தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் எதற்கு பயன்படுகிறது?
![தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் எதற்கு பயன்படுகிறது? தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் எதற்கு பயன்படுகிறது?](https://www.nativenews.in/h-upload/2022/07/30/1569248-tamil-certificate.webp)
PSTM Certificate Meaning in Tamil
நீங்கள் தமிழ் வழியில் கல்வி பயின்று அதற்கு ஆதாரமாக இந்த சான்றிதழை வாங்க வேண்டும். இதை நாம் எதற்கு வாங்க வேண்டும் என்றால் நீங்கள் ஏதேனும் அரசு வேலைவாய்ப்புக்கு தேர்வு எழுதும்போது அதில் மதிப்பெண்கள் அல்லது பட்டியலில் பின்தங்கியிருந்தால், அப்போது இந்த சான்றிதழ் உங்களுக்கு உதவும்.
எப்படியென்றால், தமிழ்நாடு அரசு தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உதாரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் மொத்த காலியிடங்களில், அதாவது 100 என்று வைத்துக்கொண்டால் 20 பேருக்கு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும். இதேபோல் தமிழக அரசின் அனைத்து துறைகளின் தேர்வுக்கும் இது பொருந்தும்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களான தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களை தமிழில் படித்தவர்கள் மட்டுமே இந்த சான்றிதழை பெற முடியும்.
ஆங்கில வழி கல்வி பயின்றவர்கள் இதனை பெற முடியாது.
![](https://www.instanews.city/h-upload/2022/07/30/1569247-pstm-certificate.webp)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu