குடையோட கிளம்புங்க: இன்று இங்கெல்லாம் மழை பெய்யுமாம்

குடையோட கிளம்புங்க: இன்று இங்கெல்லாம் மழை பெய்யுமாம்
X

கோப்பு படம்

நெல்லை, தூத்துக்குடி உள்பட, 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதனிடையே, வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகி, பல பகுதிகளில் மழைவாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி காரணமாக, இன்று தொடங்கி, வரும் 31 வரை தமிழகத்தில் கனமழை இருக்கும். இன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

வரும் 31- ஆம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; பிற மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil