குற்றால பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் கொட்டத் தொடங்கிய தண்ணீர்

குற்றால பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் கொட்டத் தொடங்கிய தண்ணீர்
X

ஐந்தருவியில் கண்ணீர் விழத்தொடங்கியதால் சுற்றுலாப்பயணிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்

குற்றால சீசன் தொடங்கியதால் வியாபாரிகள் சுற்றுலாப் பணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

12 நாட்கள் கால தாமதத்திற்கு பிறகு குற்றால சீசன் தொடங்கியதால் வியாபாரிகள் சுற்றுலாப் பணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் பகுதிகளில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட நிலையில், கடந்த மூன்று தினங்களாக தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் லேசான சாரல் மழையுடன் கூடிய இதமான சீதோசன காலநிலை நிலவியது.

இந்த நிலையில், நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீண்ட நாட்களாக முற்றிலும் வறண்டு கிடந்த குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலை முதல் லேசான தண்ணீர் கொட்டி வருகிறது. குறிப்பாக, குற்றால சீசனானது ஜூன் மாத ஆரம்பம் முதல் ஆகஸ்ட் மாத இறுதிவரை களை கட்டுவது வழக்கம்.

அந்த வகையில், சற்று காலதாமதமாக ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்க வேண்டிய இந்த சீசனானது, தற்போது தொடங்கியுள்ள குறிப்பிடத்தக்கது. அதேபோல், குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவி பகுதியில் உள்ள ஐந்து அருவிகளில் 4 அருவிகளில் தண்ணீரானது, தற்போது கொட்டி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், குற்றால அருவியில் தண்ணீர் கொட்டி வருவதை அறிந்து கொண்ட உள்ளூர் வாசிகள் ஒரு சிலர் குற்றால சீசனை முதலில் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அருவிகளில் கூடி ஆனந்த குளியலிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story