வாக்காளர் பட்டியல்: ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும்

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை 31ஆம் தேதி வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை வரும் 31ஆம் தேதி வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:

கிராம ஊராட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அந்தந்த தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் முறையிடலாம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!