வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்

Vitamin C Rich Foods in Tamil-நமது எண்சாண் உடம்பு நோய் நொடியின்றி இருப்பதற்கு வைட்டமின் சி சத்து மிக முக்கியமானதாகும். வைட்டமின் சியில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள ரத்தத்தில் வெள்ளையணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது நமது உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
வைட்டமின் சி
எனவே நாம் நமது அன்றாட உணவு முறையில் வைட்டமின் சி உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டோம் என்றால் இதய நலன் ஆரோக்கியமாக இருக்கும். பொதுவானநோய்கள் பல அண்டாமலும் நம்மை எனெர்ஜியாக வைத்துக் கொள்ளவும் உதவும். மேலும் ஒரு நாளைக்கு 100மி.கி. வைட்டமின் சி-யை எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர் உருவாகும் அபாயம் குறைவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலேயே வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. ஆனால், அது தெரியாமல் பெரும்பாலும் அந்த உணவுகளை நாம் தவிர்த்து கூட வருகிறோம்.
இனி வைட்டமின் சி அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றி பார்ப்போமா?
பச்சை மிளகாய்
நமது சமையல் அறையில் முக்கிய இடத்தை பிடிக்கும் பச்சைமிளகாய் நமது உணவில் ஏதாவது ஒரு வகையில் கலந்து விடுகிறது. ஆனால், அதன் காரத் தன்மையால் அதை தவிர்த்து விடுகிறோம்.ஒரு பச்சை மிளகாயில் 109மி.கி. வைட்டமின் சி உள்ளது. அதே போல், ஒரு சிவப்பு மிளகாயில் 65மி கி. வைட்டமின் சி உள்ளது.
கொய்யா
கொய்யாப்பழம் பல்வேறு ஊட்டச்சத்து நலன்களை கொண்டது. இதில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட் இசோப்பேன் உள்ளது. மேலும் இதை தொடர்ந்து உண்பதால் நமது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும். வெளிநாடுகளில் கொய்யாவை மருத்துவர் கொய்யா என்றே அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
மஞ்சள் நிற குடைமிளகாய்
வைட்டமின் சி அதிகமாக எடுத்துக் கொள்வது கண்களுக்கு நல்லது. ஏனெனில், வைட்டமின் சி சத்து குறையும்போது நமது கண்களில் புரை விழுவது, பார்வை மங்குவது போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.ஒரு முழு மஞ்சள் குடைமிளகாயில் 342மிகி வைட்டமின் சி அடங்கியுள்ளது.
ஆரஞ்சு பழம்
எல்லோரும் விரும்பி உண்ணும் சிட்ரஸ் பழமான ஆரஞ்சு ஒன்றை சாப்பிட்டால் 83மி.கி. வைட்டமின் சி கிடைக்கும். ஆரஞ்சு போலவே இருக்கும் கிரேப்ப்ரூட்டிலும் 46மி.கி. வைட்டமின் சி கிடைக்கும்.
ஸ்ட்ராபெரி
பொதுவாக ஸ்ட்ராபெரியை பணக்கார பழம் என்று சொல்வார்கள். ஆனால், தற்போது மிக சுலபமாகவும், மலிவாகவும் இந்த பழம் கிடைக்கிறது. 166 கிராம் ஸ்ட்ராபெரி சாப்பிட்டீர்கள் என்றால் 97மிகி வைட்டமின் சி கிடைக்கும்.
பப்பாளி பழம்
பப்பாளிப் பழம் நமக்கு எளிதாக கிடைக்கிறது. பப்பாளி இலை முதல் பழம் வரை ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியதாகும். மறதி நோய் இருப்பவர்களுக்கு பப்பாளி நல்லது. மேலும் இது நமது ஞாபக சக்தியை கூர்மையாக்கும்.145 கிராம் பப்பாளி சாப்பிட்டால் 88 மி.கி வைட்டமின் சி கிடைக்கும்.
எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழமும் தன்னுள் பலவிதமான சக்திகளை அடக்கி வைத்துள்ளது. எலுமிச்சை சாறில் உள்ள கூறுகள் ஆன்டிஆக்ஸிடண்டுகளாக பணிபுரிகின்றன. ஒரு முழு எலுமிச்சை பழத்தில் 45மிகி வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சை பழம் ராஜகனி என அழைக்கப்படுகிறது.
ப்ரோக்கோலி
இதில் புற்றுநோய்க்கு எதிராக போராடும் பண்புகள் உள்ளன. மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்ல பலனை தருகிறது.அரை கப் வேக வைத்த ப்ரோக்கோலியில் 51 மிகி வைட்டமின் சி உள்ளது.
கிவி பழம்
ஒரு கிவி பழத்தில் 56மிகி வைட்டமின் சி அடங்கியுள்ளது. இதன் பண்புகளின் சிறப்பு என்னவென்றால் இது ரத்தப்போக்கு மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். வெள்ளையணுக்களின் இயக்கத்தை அதிகரிக்கும்.
கொத்த மல்லி
8கிராம் கொத்தமல்லியில் 10மி.கி. வைட்டமின் சி உள்ளது. மேலும் கொத்தமல்லியில் வைட்டமின் கே மற்றும் ஆ
ன்டிஆக்ஸிடண்டுகளும் உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu