விருதுநகரில் சிலிண்டர் கியாஸ் கசிவினால் தீப்பற்றி எரிந்து பெண் காயம்

விருதுநகரில் சிலிண்டர் கியாஸ் கசிவினால் தீப்பற்றி எரிந்து பெண் காயம்
X

விருதுநகரில் கியாஸ் கசிவினால் பெண் தீக்காயம் அடைந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

விருதுநகரில் சிலிண்டர் கியாஸ் கசிவினால் தீப்பற்றி எரிந்து பெண் காயம் தீக்காயம் அடைந்தார்.

விருதுநகர் பாண்டியன் நகர் முத்தால்நகர் சின்னக்காளை தெருவில் வசிப்பவர் பாலாஜி. மாட்டுத்தீவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா சங்கீதா (46). வழக்கம்போல் காலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் தீ பற்றி எரிந்தது.

இதில் சமையல் செய்து கொண்டிருந்த மீனா சங்கீதா பலத்த காயமுற்று அலறினார். பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட மீனா சங்கீதாவை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்